வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெட்டுக்கிளியும் சருகுமானும் கதை தமிழ் | Vettukiliyum Sarugumaanum Story in Tamil

Updated On: January 4, 2025 11:58 AM
Follow Us:
8th std Tamil Book Answers Term 1 Lesson 2.4
---Advertisement---
Advertisement

வெட்டுக்கிளியும் சருகுமானும் கட்டுரை | வெட்டுக்கிளியும் சருகுமானும் short note

வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையை சுருக்கி எழுதுக: வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ வலைத்தளங்களில் பல விதமான தகவல்களை படித்திருப்பீர்கள். ஆனால் நம்முடைய பொதுநலம்.காம் பதிவானது முற்றிலும் வித்தியாசமான பதிவாகும். நம்முடைய தளத்தில் போடப்படுகிற தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் முகநூல் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கடைசி வரை உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். வாசகர்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களுடைய வலைத்தளத்தில் மாணவர்களுக்கான கல்வி பாடசாலை, அழகு குறிப்பு, தற்போதைய நடப்பு நிகழ்வுகள், ஆரோக்கியம் போன்ற பல செய்திகளை பதிவிட்டு வருகிறோம். இந்த பதிவில் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத்தில் அமைந்துள்ள வெட்டுக்கிளியும் சருகுமானும் கதை சுருக்கம் பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

நிலம் பொது எட்டாம் வகுப்பு வினா விடை

வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக:

**முன்னுரை**
**வெட்டுக்கிளியும் சருகுமானும்**
**வெட்டுக்கிளியும் பித்தகண்ணும்**
**உயிர் பிழைத்த கூரன்**
**முடிவுரை**

முன்னுரை:

காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செடி கொடிகள், விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய கதைகளுள் ஒன்றுதான் “வெட்டுக்கிளியும் சருகுமானும்” ஆகும்.

வெட்டுக்கிளியும் சருகுமானும்:

குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.

ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. என்ன கூரன், பாரத்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்? அதற்கு சருகுமான், “காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது.

விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளையை எச்சரித்தது. பித்தகண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.

வெட்டுக்கிளியும் பித்தகண்ணும்:

கூரனைத் தேடிக்கொண்டு பித்தகண்ணும் ஓடைப்பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப்பார்த்து உறுமியது. “கூரன் இங்கு வந்தாளா?” என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதான் முதல்முறை. பித்தக்கண்ணுவைப் பார்த்தால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.

அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது.

எட்டாம் வகுப்பு ஓடை வினா விடைகள்

உயிர் பிழைத்த கூரன்:

கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்தற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம். அதற்கு ஒரு பாடம் கற்றித்தாக வேண்டும் என்று எண்ணியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்” என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.

முடிவுரை:

அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தான் இன்றும் கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன.

எட்டாம் வகுப்பு தமிழ் பாடம் எழுத்துக்களின் பிறப்பு வினா விடைகள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now