Samacheer Kalvi 8th Book Back Answers Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய கல்வி சார்ந்த பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக பருவம் 1-ல் அமைந்துள்ள வருமுன் காப்போம் வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தில் அமைந்துள்ள கேள்வி பதில்கள் தான் கேட்கப்படுகிறது. வாங்க படித்து பயன் பெறலாம்.
நோயும் மருந்தும் எட்டாம் வகுப்பு மதிப்பீடு |
I. சொல்லும் பொருளும்:
- நித்தம் நித்தம் – நாள்தோறும்
- வையம் – உலகம்
- மட்டு – அளவு
- பேணுவயல் – பாதுகாத்தல்
- சுண்ட – நன்கு
- திட்டுமுட்டு – தடுமாற்றம்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.
- நிலம்
- வையம்
- களம்
- வானம்
விடை: வையம்
2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- நலம் + எல்லாம்
- நலன் + எல்லாம்
- நலம் + எலாம்
- நலன் + எலாம்
விடை: நலம் + எல்லாம்
3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____
- இடவெங்கும்
- இடம்எங்கும்
- இடமெங்கும்
- இடம்மெங்கும்
விடை: இடமெங்கும்
III. “வருமுன் காப்போம்” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக:
மோனை:
- உடலின் – உலகில்
- காலை – காற்று
- இடமும் – இனிய
- சுத்தமுள்ள – சுகமும்
- அருமை – அடையும்
- திட்டு – தினமும்
எதுகை:
- உடலின் – இடமும்
- கூழை – ஏழை
- சுத்தமுள்ள – நித்தம்
- திட்டு – மட்டு
- அருமை – வருமுன்
- பட்டிடுவாய் – ஓட்டிவிடும்
இயைபு:
- தினமும் – இடமும்
- கூழை – ஏழை
- திட்டு – மட்டு
- குடியப்பா – உறங்கப்பா
- உணணாமல் – தின்பாயேல்
எட்டாம் வகுப்பு திருக்குறள் வினா விடைகள் |
IV. குறுவினா:
1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?
விடை: நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்
2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
விடை: அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.
V. சிறுவினா:
- உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக:
- உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம். - காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.
- அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்.
- நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
- அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள்.
- தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
- அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!
எட்டாம் வகுப்பு வினைமுற்று வினா விடைகள் |
வருமுன்காப்போம் – கூடுதல் வினாக்கள்:
I. கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. நோயற்ற வாழ்வே குறைவற்ற __________
விடை: செல்வம்
2. நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல __________ அடிப்படை
விடை: உடல் நலத்திற்கு
3. கவிமணி எனப் போற்றப்படுபவர் __________
விடை: தேசிய விநாயகனார்
4. தேசிய விநாயகனார் __________ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்துள்ளார்.
விடை: உமர்கய்யாம் பாடல்கள்
5. உடலில் உறுதி கொண்டவரே, உலகில் __________ உடையவர்
விடை: மகிழ்ச்சி
6. சுத்தம் நிறைந்துள்ள இடங்களில் __________ உண்டு
விடை: சுகம்
7. வையம் என்பதற்கு __________ என்பது பொருள்
விடை: உலகம்
வெட்டுக்கிளியும் சருகுமானும் கதை சுருக்கம் |
II. குறு வினா:
1. எவை நம்மை நூறாண்டு வாழ வைக்ககும்?
விடை: தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
2. குளித்த பிறகு செய்ய வேண்டும் செயல் என கவிமணி கூறுகிறார்?
விடை: கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும் என கவிமணி கூறுகிறார்
3. நல்ல உடல் நலத்திற்கு அடிப்படையானது எது?
விடை: நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை.
4. உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?
விடை: உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார்
5. இனிய வாழ்வைத் தராது எவை?
விடை: உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
6. கவிமணி குறிப்பு வரைக:
- கவிமணி குமரி மாவட்டத்தில் தேரூரில் பிறந்தவர்.
- கவமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர்.
- இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
- தேசிய விநாயகனார் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |