தமிழர் மருத்துவம் எட்டாம் வகுப்பு வினா விடை | 8th std Tamil Book Answers Term 1 Lesson 3.3

Advertisement

தமிழர் மருத்துவம் எட்டாம் வகுப்பு மதிப்பீடு | Samacheer Kalvi 8th Standard Tamil Solution

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய கல்வி பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பருவம் ஒன்றில் அமைந்துள்ள தமிழர் மருத்துவம் வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம். இந்த வினா விடைகளானது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க தமிழர் மருத்துவம் வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

வருமுன் காப்போம் வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.

  • தாவரங்களை
  • விலங்குகளை
  • உலோகங்களை
  • மருந்துகளை

விடை: தாவரங்களை

2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.

  • மருந்தின்
  • உடற்பயிற்சியின்
  • உணவின்
  • வாழ்வின்

விடை: உணவின்

3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.

  • தலைவலி
  • காய்ச்சல்
  • புற்றுநோய்
  • இரத்தக்கொதிப்பு

விடை: இரத்தக்கொதிப்பு

4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.

  • சுவைக்காக
  • சிக்கனத்திற்காக
  • நல்வாழ்வுக்காக
  • உணவுக்காக

விடை: நல்வாழ்வுக்காக

II. குறு வினா:

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

விடை:

  • தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும்.
  • நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான்.
  • இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

விடை:

  • 45 நிமிடத்தில் 3கி.மீ. நடைப்பயணம்
  • 15 நிமிடம் யோக, தியானம், மூச்சுப்பயிற்சி
  • 7 மணி நேர தூக்கம்
  • 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

விடை:

மூலிகை, தாவர இலை, உலோகங்கள், பாஷானங்கள், தாதுப்பொருள்கள் ஆகியன தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுகின்றனவாகும்.


நோயும் மருந்தும் எட்டாம் வகுப்பு மதிப்பீடு

III. சிறு வினா:

1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

விடை:

  • மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
    மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்
  • தன் உணவுக்காக வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணம், மன அழுத்தம், எது கேளிக்கை? எது குதூகலம்? எது படிப்பு? எது சிந்தனை? என்ற புரிதல் இல்லாமை ஆகியவற்றைக் கூடுதல் காரணங்களாகச் சொல்லலாம்
  • நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக நாம் அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்து விட்டோம்.
  • இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்து விட்டோம். இதுவே இன்றைக்கு பல நோய்கள் பெருக மிக முக்கிய காரணம் ஆகும்.

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

விடை:

  • நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதை விட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.
  • எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
  • இரவுத்தூக்கம் மிகவும் இன்றியமையாதது.
  • உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

எட்டாம் வகுப்பு திருக்குறள் வினா விடைகள்

IV. நெடு வினா:

  1. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து
    எழுதுக.

விடை:

  • வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்.
  • வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • அந்தக் காலத்தில் எப்படி மூலிகைகளை மருந்தாகப் பார்த்தார்களோ அப்படியே தாதுப் பொருட்களையும், உலோகத்தையும் பார்த்தார்கள்.
  • அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.
  • ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
  • ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும்.
  • அதனால் உணவு எப்படிப் பக்க விளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
  • தமிழர் மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால் தனித்துவமான பார்வை இதன் முதல் சிறப்பு
  • இரண்டாவது, சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது.
  • மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான
    சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.
  • அதாவது “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளின் படி நோயை மட்டுமின்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கிறது.
எட்டாம் வகுப்பு வினைமுற்று வினா விடைகள்

 


எட்டாம் வகுப்பு இயல் மூன்று தமிழர் மருத்துவம் வினா விடை

தமிழர் மருத்துவம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தமிழ் மக்கள் ____________  அருமருந்தென அறிந்தவர்கள்

விடை: அருந்தும் உணவே

2. சித்தமருத்துவம் என்பது ____________, ____________  சுருங்கியது.

விடை: மரபுவழி மருத்துவமாகவும், நாட்டு மருத்துவமாகவும்

3. மருந்து என்பதே ____________ இருக்கிறது.

விடை: உணவின் நீட்சியாக

4. நிலங்களை ____________ , ____________  நச்சுப்படுத்துகிறது.

விடை: உரங்களும், பூச்சிக்கொலிகளும்

5. தினமும் ____________ லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

விடை: மூன்று

II. பிரித்தெழுதுக:

  • மருந்தென = மருந்து + என
  • உடற்கூறுகள் = உடல் + கூறுகள்
  • தங்களுக்கென = தங்களுக்கு + என
  • வந்துள்ளோம் = வந்து + உள்ளோம்
  • பழந்தமிழர் = பழமை + தமிழர்
  • கண்டறிந்து = கண்டு + அறிந்து

III. குறு வினா:

1. தமிழ்மக்கள் எவற்றில் சிறந்து விளங்கினர்?

விடை: தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.

2. மனிதன் தொடக்க காலத்தில எவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்?

விடை: வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்.

3. எவை மனிதனை நலமாக வாழவைக்கும்?

விடை: சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் மனிதனை நலமாக வாழவைக்கும்.

IV. சிறு வினா:

1. தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும் போது எவ்வாறு விரிந்திருக்கிறது.

தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும்போது

  • நாட்டு வைத்தியமாகவும்
  • பாட்டி வைத்தியமாகவும்
  • மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும்
  • உணவு சார்ந்த மருத்துவமாகவும்
  • பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

2. நடை முறையில் உள்ள மருத்துவ முறைகள் சிலவற்றை கூறு?

  • சித்த மருத்துவம்
  • ஆயுர்வேத மருத்துவம்
  • யுனானி மருத்துவம்
  • அலோபதி மருத்துவம்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement