எட்டாம் வகுப்பு இயல் 1 தமிழ் மொழி வாழ்த்து மதிப்பீடு – 8th Tamil Book Back One Mark Questions with Answers
வணக்கம் நண்பர்களே பள்ளி படிக்கும் மாணவர்களின் நலன் கருதி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகத்தில் உள்ள தமிழ்மொழி வாழ்த்து வினா விடைகளை பதிவு செய்கிறோம். இந்த பதிவானது பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்விற்கு தயாராகும் அனைத்து தேர்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படித்து பயன் அடையுங்கள்.
| ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள் |
**தமிழ்மொழி வாழ்த்து பாடல் வரிகள்**
வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே! – பாரதியார்
தமிழ்மொழி வாழ்த்து வினா விடைகள் – Samacheer Kalvi 8th Tamil Book Term 1 Chapter 1.1
சொல்லும் பொருளும்:
- நிரந்தரம் – காலம் முழுமையும்
- வண்மொழி – வளமிக்கமொழி
- வைப்பு – நிலப்பகுதி
- இசை – புகழ்
- சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
- தொல்லை – பழமை, துன்பம்
சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ் வினா விடைகள் முதல் பருவம்:
- மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
A. வைப்பு
B. கடல்
C. பரவை
D. ஆழி
விடை : வைப்பு
2. “என்றென்றும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
A. என் + றென்றும்
B. என்று + என்றும்
C. என்றும் + என்றும்
D. என் + என்றும்
விடை : என்று + என்றும்
3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
A. வான + மளந்தது
B. வான் + அளந்தது
C. வானம் + அளந்தது
D. வான் + மளந்தது
விடை : வானம் + அளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
A. அறிந்ததுஅனைத்தும்
B. அறிந்தனைத்தும்
C. அறிந்ததனைத்தும்
D. அறிந்துனைத்தும்
விடை : அறிந்தனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
A. வானம்அறிந்து
B. வான்அறிந்த
C. வானமறிந்த
D. வான்மறிந்
விடை : வானமறிந்த
பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சாெற்களை எடுத்து எழுதுக:
1. வாழ்க – வாழிய
2. எங்கள் – என்றென்றும்
3. வண்மொழி – வளர்மொழி
4. அகன்று – அறிந்த
தமிழ்மொழி வாழ்த்து – சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ் மொழி வாழ்த்து வினா விடைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
- _____________ கருத்தை அறிவிக்கும் கருவியாகும்
விடை: மொழி
2. தமிழர்கள் தமிழை _____________ ஆகக் கருதி போற்றி வந்துள்ளனர்
விடை: உயிர்
3. _____________ அறிந்த தனைத்து அறிந்து வளர் மொழி வாழியவே
விடை: வானம்
4. இசை என்பதற்கு பொருள் _____________
விடை: புகழ்
5. “தமிழ்தேனீ” என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் _____________
விடை: பாரதிதாசன்
| ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில் |
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |













