ஒன்பதாம் வகுப்பு TNPSC முக்கிய வினா விடைகள் – 9th Tamil Book Back Answers
நண்பர்களுக்கு வணக்கம்.. தற்பொழுது TNPSC குரூப் 4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரும்பாலானவர்கள் தற்பொழுது வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றன. விண்ணப்பித்து விட்டால் மட்டும் போதாது 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் நீங்கள் கரைத்து குடிக்க வேண்டும் அப்பொழுது தான் நாம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, வீஏஓ பொருத்தவரை ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து 25 வினாக்கள் கேட்கப்படுகின்றன எனவே இதனை கருத்தில் கொண்டு இங்கு நாம் 9ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் 1000 வினா விடைகளை பதிவு செய்துள்ளோம் அதனை படித்து பயன் பெறுங்கள்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் வினா விடைகள் pdf
1 தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
விடை: முத்துலட்சுமி
2 நடுவண் அரசு அறிஞர் அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயத்தை வெளிட்ட ஆண்டு.
விடை: 2009
3 ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க கால நூல்
விடை: கலித்தொகை
4 விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
விடை: 3
விகார புணர்ச்சி (தோன்றல், திரிதல், கெடுதல்)
5 இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை யார்?
விடை: விக்ரம் சாராபாய்
6 மாறுபட்ட ஒன்றை கண்டறி (மூவறிவு)
விடை: காணல்
ஓரறிவு – புல், மரம்
ஈரறிவு – சிப்பி, நத்தை
மூவறிவு – கரையான், எறும்பு
நான்கறிவு – நண்டு, தும்பி
ஐந்தறிவு – பறவை, விலங்கு
ஆறறிவு – மனிதன்
7 நாட்டின் சிறந்த பாதுகாப்புகளுள் திருவள்ளுவர் எதற்கு முதலிடம் தருகிறார்.
விடை: நீர்
8 சேக்கிழாரின் காலம் கி.பி——ஆம் நூற்றாண்டு
விடை: 12
9 பொருத்துக:
- கடலாடுதல் – தெய்வச் சிலை
- சனி நீராடு – சிற்றிலக்கியம்
- நீராடல் பருவம் – திருமணம்
- திருமஞ்சனம் ஆடல் – ஔவையார்
விடை: 3, 4, 2, 1
10 சேக்கிழார் கீழ்கண்ட எந்த அரசன் அவையில் முதலமைச்சராக இருந்தார்
விடை: இரண்டாம் குலோத்துங்கன்
11 ஜப்பானியர்கள் யாருடைய தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.
விடை: மோகன் சிங்
12 யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவர்
விடை: கணியன் பூங்குன்றனார்
13 சேர நாட்டில் நீர்பறவைகள் எந்த மலர்கள் மலர்வதைக் கண்டு தண்ணீரில் தீ பிடித்தது என அஞ்சுபாதக முத்தொள்ளாயிரம் குறிப்பிடுகிறது.
விடை: செவ்வாம்பல்
14 முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் வகுத்தவர் யார்?
விடை: கோர்டன் ஆல்போர்ட்
15 நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்க எத்தனை நாட்கள் நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்தார்.
விடை: 91 நாட்கள்
16 மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்ற இயறக்கையை வாழ்த்தி பாடியவர் யார்?
விடை: இளங்கோவடிகள்
17 கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு
விடை: 2003
18 1990-யில் வையக விரிவு வலை வழங்கியவை உருவாக்கியவர்
விடை: டிம் பெர்னெர்ஸ் லீ
19 இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் யார்:
விடை: அப்துல் காலம்
20 திருவள்ளுவர் குறிப்பிடும் சிறந்த செல்வம் எது?
விடை: கேள்வி
21 இந்திர விழா எந்த நகருடன் அதிகம் தொடர்புடையது
விடை: புகார்
22 தவறான இணையை கண்டறி
விடை: பணிலம் – முத்து
23 ஐந்து மீட்டர் வெட்டினான் என்பது ——- ஆகுபெயர்.
விடை: நீட்டல் அளவை
24 குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதை பிண்டம் எனக் கூறும் நூல் எது?
விடை: புறநானூறு
25 நான் மனிதன் மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று என்று கூறியவர் யார்?
விடை: தெறென்ஸ்
26 பண்புடைமை என்பது அவரவர் வருத்தத்திற்கு பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் போன்றவை என்றவர்
விடை: பரிப்பெருமாள்
27 டெல்லி சலோ (டெல்லி நோக்கி செல்லுங்கள்) என முழங்கியவர் யார்?
விடை: நேதாஜி
28 மனிதன் கீழ்கண்ட எதன் மூலம் முதலில் தன எண்ணங்களை பிறர்க்கு தெரிவித்தான்.
விடை: இவை அனைத்தும்
29 பொருத்துக (பெரிய புராணம்)
- காடுகள் – சங்கு
- சோலைகள் – கரும்பு
- பக்கங்கள் – அரும்புகள்
- வயல்கள் – குவளை மலர்கள்
விடை: 2, 3, 4, 1
30 குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று என விளக்கியவர் யார்?
விடை: தொ.பரமசிவன்
31 உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படும் நாள்
விடை: ஜூன் 5
32 பெரிய புராணம் நீர்நாடு என குறிப்பிடுவது?
விடை: சோழ நாடு
33 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இலகுவார்ப் பொறுத்தல் தலை என்ற குறளில் பயின்று வரும் அணி ‘
விடை: உவமையணி
34 சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் —– சிறிய வேர்கள்
விடை: 5
35 யானைப் படைகளின் வீரத்தை எந்த நாட்டுக்கு எடுத்துக்காட்டாக முத்தொள்ளாயிரம் குறிப்பிடுகிறது.
விடை: சோழநாடு
36 எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும் நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் என்று கூறியவர் யார்?
விடை: செனக்கா
37 இமயத்துக்கோடு உயர்ந்தன என்று இமயமலை பற்றி சிறப்பித்து கூறும் நூல்
விடை: புறநானுறு
38 நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும் என்றவர் யார்?
விடை: நேதாஜி
39 குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதை பிண்டம் என்றவர் யார்?
விடை: ஆலத்தூர் கிழார்
40 நாறுவ என்று சொல்லின் பொருள்
விடை: முளைப்ப
41 சிற்ப தொழிலுக்கு அடிப்படையான உறுப்புகள் பற்றி குறிப்பிடும் நூல்
விடை: மணிமேகலை – திவாகர நிகண்டு
42 கவிஞர் வைரமுத்து இந்திய அரசின் எந்த விருதினை பெற்றார்
விடை: பத்மபூஷன்
43 தவறான இணையை கண்டறி (சொல்லும் பொருளும்)
விடை: குழை – அருவி
44 கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரை சூடியவர் யார்
விடை: சர் ஆர்தர் காட்டன்
45 வெண்தாடி வேந்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
விடை: பெரியார்
46 இமயதீண்டி இன் குரல் பயிற்றிக் என்று இமயமலை பற்றி சிறப்பித்து கூறும் நூல்
விடை: புறநானுறு
47 நான் அன்டோநீன்ஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன் நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன் என்று கூறியவர் யார்?
விடை: மார்க்ஸ் அரேலியஸ்
48 இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் டான் என்றவர் யார்?
விடை: தில்லான
49 நிலத்தை ஐந்து வகையாக பிரித்தவர்
விடை: தொல்காப்பியர்
50 நீரின்றி அமையாது உலகம் என்றவர்
விடை: திருவள்ளுவர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொது அறிவு வினா விடைகள்..!
51 பெரிய புராணம் குறிப்பிடும் குவளை மலர்களின் நிறம்
விடை: கருப்பு
52 நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன என்றவர்
விடை: மாங்குடி மருதனார்
53 மாறுபட்ட ஒன்றை கண்டறி (நான்கறிவு)
விடை: கேட்டல்
54 இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: அப்துல் கலாம்
55 முத்து வளம் கொண்ட நாடாக முத்தொள்ளாயிரம் குறிப்பிடுவது
விடை: பாண்டிய நாடு
56 இல்லற வாழ்க்கையின் நோக்கமாக வள்ளுவர் குறிப்பிடுவது
- ஈகை
- விருந்தோம்பல்
- ஆளுமை
- A & B
விடை: A & B
57 மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர் கருவி என்றவர் யார்?
விடை: பெரியார்
58 திருக்குறள் போன்ற உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது என்று கூறியவர் யார்?
விடை: ஆல்பர்ட் சுவைட்சர்
59 டோக்கியோ கேடட்ஸ் பிரிவுக்கு நேதாஜியால் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை
விடை: 45
60 1846-யில் குறியீடுகளை மின்னாற்றல் உதைவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டவர் யார்
விடை: அலெக்சாண்டர் பெயின்
61 வைரமுத்து இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை எத்தனை முறை பெற்றார்
விடை: 7
62 கீழ்கண்ட சொற்களில் வன்தொடர்க் குற்றியலுகர சொல்
விடை: நாக்கு
63 தவறான இணையை கண்டறி (சொல்லும் பொருளும்)
- மேதி – எருமை
- சுரிவளை – சங்கு
- வேரி – மலர்கள்
- பகடு – எருமைக்கடா
விடை: வேரி – மலர்கள்
64 ஏரியை கண்மாய் என்று கீழ்கண்ட எந்த மண்டலத்தின் நிலப்பகுதியில் அழைக்கப்பட்டது
விடை: பாண்டிய
65 திருக்குறள் கூறும் சான்றோரின் பண்புகள் இடம் பெரும் அதிகாரம் எது
- நட்பு
- பெருமை
- பண்புடைமை
- இவை அனைத்தும்
விடை: இவை அனைத்தும்
66 இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படை பிரிவின் பெயர்
விடை: ஜான்சி ராணி
67 படுதிரை வையம் பாத்திய பண்பே பாடல் அடி இடம் பெரும் நூல்
விடை: தொல்காப்பியன்
68 பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆண்டு
விடை: 1978
69 சான்றோர்கள் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தரும் எனக் கூறும் நூல்
விடை: புறநானுறு
70 பக்திச்சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவிவலவ என சேக்கிழாரை பாராட்டியவர்
விடை: மீனாட்சி சுந்தரனார்
71 கண்மாய் என்பதன் வட்டார வழக்குச் சொல்
விடை: கம்மாய்
72 தவறான இணையை கண்டறி
- பாண்டில் – வட்டம்
- சிமயம் – மலை உச்சி
- நாளிகேரம் – தென்னை
- கோளி – ஆச்சா மரம்
விடை: கோளி – ஆச்சா மரம்
73 சிற்பங்களை அவற்றின் உருவ அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்
விடை: இரண்டு
- முழு உருவச் சிற்பங்கள்
- புடைப்பு சிற்பங்கள்
74 தமிழகத்தில் ரோமானியர்களின் பழங்காசுகள் கண்டறியப்பட்ட இடம்
விடை: கோவை
75 முத்தொள்ளாயிரத்தின் பாவகை
விடை: வெண்பா
76 கடையெழு வள்ளல்களின் நன்மையை நன்மைக்காகவே செய்தவர் யார்
விடை: ஆய்
77 அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றை கூறும் நூல் எது?
விடை: யசோதரா காவியம்
78 சான்றோர்கள் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தரும் என புறநானூற்றில் புலவர் யாருக்கு அறிவுரை கூறுகிறார்
விடை: கோப்பெருஞ்சோழன்
79 மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறை பொழுது வேண்டுமா அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழ கற்றுக்கொள் என்றவர்
விடை: நேதாஜி
80 எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு பாடல் அடி இடம் பெறும் நூல்
விடை: கலித்தொகை
81 என்னைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற —– தரும்.
விடை: பெருமை
82 பாண்டெலிகிராப் தொலைநகல் கருவியை உருவாக்கியவர் உயர்
விடை: ஜியோவன்னின் காசில்லி
83 ஆரியப்பட்டா என்று முதல் செயற்கைகோள் ஏவுதலுக்கு காரணமானவர் யார்
விடை: விக்ரம் சாராபாய்
84 பெரிய புராணத்தில் நீர்நிலை கரையோரங்களில் உலவுவதாக புலவர் குறிப்பிடுவது
விடை: அன்னம்
85 நாட்டு விடுதலையை விட பெண் விடுதலை முதன்மையானது என்றவர் யார்
விடை: பெரியார்
86 உண்டாலம்ம இவ்வுலகம் என்னும் பாடலில் பிறருக்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும் என்று கருத்து இடம் பெரும் நூல்
விடை: புறநானூறு
87 சீவக சிந்தாமணியில் வெள்ளமானது —- இல்லாத மக்களுக்கு விரைந்து பாயும் வகையில் செல்வதாக புலவர் குறிப்பிடுகிறார்
விடை: ஊக்கம்
88 சான்றோர்கள் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தரும் என கூறிய புலவர்
விடை: பிசிராந்தையார்
89 முத்தொள்ளாயிரம் எத்தனை பாடல்களை கொண்ட நூல்
விடை: 2700
90 ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் பெருமையை கூறும் நூல்
விடை: திருஜ்தொண்டர் திருவந்தாதி
91 கல்லணையில் நீளம் எத்தனை அடிகள்
விடை: 1080
92 உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என கூறும் சங்க கால பாடல்
விடை: புறநானூறு
93 இந்திய நீர் பாசனத்தின் தந்தை
விடை: சர் ஆர்தர் காட்டன்
94 மாறுபட்ட ஒன்றை கண்டறி
- உற்றறிதல்
- சுவைத்தல்
- பகுத்தறிதல்
- நுகர்தல்
விடை: பகுத்தறிதல்
95 முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
விடை: மலேசியா – கோலாலம்பூர்
96 எங்கு நடைபெற்ற மாநாட்டில் ஈ.வே.ராவுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது
விடை: சென்னை
97 வள்ளுவரை உலகப் புலவர் என போற்றியவர் யார்
விடை: ஜி.யு.போப்
98 சீவக சிந்தாமணியில் —– பேரொலி எழுப்புவதால் வரால் மீன்கள் கலைந்து ஓடுகின்றன என புலவர் குறிப்பிடுகிறார்
விடை: எருமை
99 இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
விடை: இந்தியா – சென்னை
100 வைரமுத்து தமிழகத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதை எதனை முறை பெற்றார்
விடை: 6
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் இலக்கணம் வினா விடை!
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |