அகர முதல எழுத்தெல்லாம் திருக்குறள் விளக்கம்..! | Agara Mudhala Ezhuthellam Thirukkural Meaning in Tamil

Advertisement

Agara Muthala Eluthellam Kural Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அகர முதல எழுத்தெல்லாம் திருக்குறளின் விளக்கத்தினை (Agara Muthala Eluthellam Meaning) பற்றி கொடுத்துள்ளோம். முதல் திருக்குறளான “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற திருக்குறளின் விளக்கத்தினை பற்றி நாம் அனைவருமே அறிந்துகொள்ள வேண்டும்.

திருக்குறள் நூலில் கடவுள் வாழ்த்தில் முதல் குறளாக இடம் பெற்றிருப்பது அகர முதல் குறள் தான். திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நம்முடைய வாழ்வியலுக்கு மிகவும் எடுத்துக்காட்டு குறளாக விளங்குகிறது. திருவள்ளுவர் இயற்றிய ஒவ்வொரு திருக்குறளுக்கும் நாம் கண்டிப்பாக அதன் அர்தத்தினை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் கடவுள் வாழ்த்து அதிகாரமான குறள் ஒன்றில் அமைந்துள்ள அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்கக்கூடிய குறளிற்கு என்ன பொருள் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் குறள் விளக்கம்

அகர முதல எழுத்தெல்லாம் திருக்குறள் பொருள்:

அகர முதல எழுத்தெல்லாம் திருக்குறள் பொருள்

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 

இந்த திருக்குறளுக்கு பலபேர் உரை எழுதியுள்ளார்கள். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

மு.வ. விளக்க உரை:

மு. வரதராசனார் அவர்கள் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

மணக்குடவர் உரை:

எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தை தமக்கு முதலாகவுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து.

கலைஞர் உரை:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருள்

சாலமன் பாப்பையா உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

குறள் விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.

திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement