அன்பும் அறனும் திருக்குறள் பொருள் | Anbum Aranum Thirukkural in Tamil
Anbum Aranum Thirukkural Tamil: தமிழில் சிறப்பு வாய்ந்த நூல்கள் பல இருந்தாலும் மிகவும் போற்றுதலுக்குரிய நூல் என்றால் அது திருக்குறள் தான். திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்களும் 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. திருக்குறளில் உள்ள கருத்துக்கள் யாவும் அக்காலத்தில் உள்ள மக்களுக்கும், இக்காலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு பொருந்துவதாக இருக்கின்றன. பல கருத்துக்கள் அடங்கியுள்ள திருக்குறளில் இல்வாழ்க்கை அறத்தில் உள்ள அன்பும் அறனும் குறளையும் அதன் விளக்கத்தையும் இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறள் – அன்பும் அறனும் பொருள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
- குறள் எண் – 45
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – இல்வாழ்க்கை
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருள் |
கலைஞர் உரை – அன்பும் அறனும் திருக்குறள் பொருள்:
- ஒருவனின் இல்வாழ்க்கை நல்ல பண்புடையதாகவும், பயனுள்ளதாகவும் அமைவதற்கு, அவனின் மனதில் அன்பான உள்ளம் மற்றும் நல்ல சிந்தனைகளும் இருக்க வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை:
- கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு மற்றும் செல்வம் இரண்டையும் மற்றவர்களிடத்தும் பகிர்ந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை பண்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
மு. வரதராசனார் உரை – Anbum Aranum Thirukkural:
- இல்வாழ்க்கை அன்பாகவும், அறமாகவும் அமையுமானால் அதுவே அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
குறல் விளக்கம் – Anbum Aranum Thirukkural விளக்கம்:
- இல்லறமெனும் வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் உண்மையாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளையை அன்புடனும், ஒழுக்கத்துடனும், நல்ல சிந்தனைகளை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.
- இல்லறத்தில் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும். அவ்வாறு கடமையை சரியாய் செய்தால் செல்வத்தை ஈட்டலாம், அதனால் குடும்பத்தில் இன்பம் நிலைக்கும்.
- ஒருவரின் வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய நான்கு பொருள்களும் சரியாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தொடர்புடைய பதிவு: |
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |