A.P.J abdul Kalam 10 lines in tamil
இன்றைய பதிவில் அப்துல் கலாம் பற்றிய சில வரிகளை பார்க்க போகிறோம். இளைஞர்களே கனவு காணுங்கள், இந்திய எதிர்காலம் உங்கள் கைகளில் தான் உள்ளது என்கிற உத்வேக வரிகளுக்கு சொந்தக்காரனா கனவுகளின் நாயகனாகிய மறைந்த ஏவுகணைத் தொழில் நுட்ப விஞ்ஞானியும், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் ஆகிய திரு A.P.J அப்துல் கலாம் இருந்தார் நான் விரும்பும் தலைவர்களில் அப்துல் கலாம் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. ஏனெனில் இவர் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து உலகமெங்கும் இந்தியாவின் பெருமையை பேச செய்த அணுவிஞ்ஞானி ஆவார். பின்னாளில் இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்தவர். வறுமையான பின்புலத்தில் இருந்து தனது தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்றவற்றால் சாதித்து காட்டிய அப்துல்கலாம் அவர்களுடைய வரலாறு பலபேருக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.இன்றைய பதிவில் அப்துல் கலாம் பற்றிய சில வரிகளை பார்க்கலாம் வாங்க…
A.P.J அப்துல் கலாம் பற்றிய பத்து வரிகள் :
தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று அறிவியல் துறையில் சாதனை செய்தவர் அப்துல்கலாம் அவர்கள்.
இந்திய ஜனாதிபதிகளில் மிக மிக எளிமையாக இருந்தவர்களில் இவர் ஒருவரே,ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவு மற்றும் சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
நாடெங்கும் படிக்கும் மாணவ மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர்.
நாட்டில் அறிவியல் வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட முடியாது என்ற காரணத்துக்காக திருமணம் செய்ய மறுத்தார்.
இவரது வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் காந்தியின் கொள்கையை பிரதிபலிக்கிறது.
அக்னி சிறகுகள் என்ற நூல் அவரின் சுயதரிசையாக வெளிவந்தது.
அப்துல்காலம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார் அவை ஒவ்வொன்றும்,வாழ்க்கையை குறிக்கோளாக கொண்டுள்ளது.
அப்துல்கலாம் அவர்கள் தன்னடக்கத்தின் உச்சமாக திகழ்ந்தார்.இவர் போன்ற பணிவான மனிதரை பார்க்க முடியாது என்று பெருந்தலைவர்கள் வியந்தனர்.
உலக தலைவர்களில் அப்துல்கலாம் எழுப்பிய இளைய சமுதாய கேள்விக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில் அளித்ததில்லை.
அப்துல்கலாம் மிக பெரிய உறவு மற்றும் நட்பு வட்டாரத்தை கொண்டவர்,ஆனால் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக யாருக்கும் சிவாரிசு செய்ததில்லை.
நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பற்றிய கட்டுரை..!
| இது போன்று பயனுள்ள பலவகையான கட்டுரைகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | Tamil Katturai |














