இளங்கலை பார்மசி (B.Pharm) படிப்பு மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்..!

Advertisement

 B Pharm Course Details in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் கல்வி மிகவும் அவசியமான ஒன்று. கல்வி ஒருவருக்கு அறிவையும் நல்லொழுக்கத்தையும் கற்றுத் தருகிறது. மனிதனுக்கு திறமை, அறிவு, நடத்தை, பண்பாடு போன்ற பல நன்மைகளை கற்றுத்தந்து முழுமையான ஆற்றல் உடைய மனிதானாக கல்வி மாற்றி தருகிறது. படிப்புகளில் பல வகையான படிப்புகள் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படிப்பின் மேல் அதிக ஆர்வம் இருக்கும். அதனை தான் படிக்க வேண்டும் என்ற துடிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் அப்படிப்பினை தேர்வு செய்யும் முன் அதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். எனவே நம் பொதுநலம் பதிவின் வாயிலாக கல்வி பற்றிய பல தகவல்களை அறிந்து வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவில் இளங்கலை பார்மசி (B.Pharm) படிப்பு பற்றிய விவரங்களை பின்வருமாறு தொகுத்துள்ளோம். எனவே நீங்கள் இளங்கலை பார்மசி (B.Pharm) படிக்க விரும்பினால் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

What is B Pharm Course in Tamil:

What is B Pharm Course in Tamil

இளங்கலை பார்மசி என்பது பி பார்ம் என்றும் அழைக்கப்படுகிறது. B Pharm என்பதன் விவரிவாக்கம் Bachelor of Pharmacy என்பதாகும். இவற்றின் படிப்பு காலம் 4 ஆண்டுகள் ஆகும். மேலும் 8 செமெஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பார்மசி என்பது மருந்துக்களை பற்றி படிக்கும் படிப்பு ஆகும். அதாவது, மருந்துகளின் தொகுப்பு, மருந்தளவு உருவாக்கம், இரசாயனத் தன்மையை பகுப்பாய்வு செய்தல் மற்றும் புதிய மருந்துகளின் முன்கூட்டிய சோதனை ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுத்தரும் படத்திட்டமாகும். எனவே மருத்துவ துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு B Pharm படிப்பை தேர்வு செய்து படிக்கலாம்.

இன்ஜினியரிங் படிப்பிற்கான வகைகள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்..

B.pharm Full Form:

Bachelor of Pharmacy என்பது B.pharm-யின் விரிவாக்கமாக இருக்கிறது.

கல்வி தகுதிகள்:

B Pharm படிக்க விரும்பும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/கணிதம் போன்ற பாடங்களை கட்டாயம்  படித்து இருக்க வேண்டும். மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பெற்றிக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் நுழைவு தேர்வு தொடர்பான தேர்வுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை விவரம்:

பி.பார்ம் படிப்புக்கான சேர்க்கை செயல்முறை ஆனது ஒவ்வொரு கல்லூரிக்கும் மாறுபடும்.

குறிப்பிட்ட கல்லூரி இணையதளம் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பங்கள் கிடைக்கும். மேலும் சேர்க்கை கட்டணம், நுழைவு தேர்வு, கல்லூரி கவுன்சிலிங் போன்ற செயல்முறைகளில் கீழ் பி.பார்ம் படிப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

B Pharmacy Course Details in Tamil:

  • மருந்து வேதியியல்
  • மருந்தியல்
  • மருந்தியல் பகுப்பாய்வு
  • மருந்து உயிரி தொழில்நுட்பம்
  • மருத்துவமனை மருந்தகம் மற்றும் மருத்துவ மருந்தகம்
  • மருந்தியல் நீதித்துறை
  • மருந்து மேலாண்மை

இதுபோன்ற பாடத்திட்டங்களின் கீழ் B Pharm இளங்கலை படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

12-வகுப்பு முடித்துவிட்டு B.sc Forestry பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

இந்தியாவில் உள்ள சிறந்த பி பார்ம் கல்லூரிகள்:

 b pharmacy course details salary in tamil

  • இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி
  • பாம்பே பார்மசி கல்லூரி
  • ஜாமியா ஹம்தார்ட் பல்கலைக்கழகம் போன்றவை

B Pharm படிப்புக்கு பிறகு படிக்க வேண்டிய படிப்புகள்:

  • எம் பார்மசி
  • டி பார்மசி

சம்பளம் பற்றிய விவரங்கள்:

இந்தியாயவில் B Pharm சம்பளம் அவருடைய திறன் மற்றும் அனுபவத்தின் கீழ் வழங்கபடுகிறது. அதாவது தொடக்க நிலையில் உள்ள ஒருவர் வருடத்திற்கு தோராயமாக 2.5 முதல் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்.

மேலும், அத்தொழிலில் அனுபவம் பெற்ற ஒருவர் வருடத்திற்கு தோராயமாக 10 முதல் 12 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement