12-வகுப்பு முடித்து விட்டு B.sc Bioinformatics பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

B.sc Bioinformatics Course Details in Tamil

பொதுவாக 12-ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அடுத்து என்ன படிப்பது என்று மிகவும் குழப்பமாக இருக்கும். அதாவது நீங்கள் ஏதாவது ஒரு படிப்பை படிக்கலாம் என்று தேர்வு செய்வீர்கள் ஆனால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேறு சில படிப்புகளின் சிறப்புகளை கூறி அதனை தேர்வு செய்து படித்தால் உனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறுவார்கள். எனவே உங்களுக்கு அடுத்து என்ன உயர்கல்வி படிப்பது என்பதில் பெரிய குழப்பம் ஏற்படும்.

எனவே தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பட்டப்படிப்பு பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அதாவது அந்த பட்டப்படிப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் அதனை படித்தால் உங்களுக்கு எந்த மாதிரியான பணிகள் கிடைக்கும் போன்றவற்றை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் B.sc Bioinformatics பட்டப்படிப்பை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

12-வகுப்பு முடித்து விட்டு B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Bioinformatics Course in Tamil:

B.sc Bioinformatics Course in Tamil

B.sc Bioinformatics என்பது இளங்கலை உயிர் தகவலியல் என்றும், Bachelor of Science in Bioinformatics என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Bioinformatics என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.

மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டபடிப்பானது மரபணு குறியீடுகள் போன்ற சிக்கலான உயிரியல் தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் அறிவியலில் நிபுணத்துவம் பெற்றது.

நீங்கள் B.sc Bioinformatics படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

B.sc Bioinformatics படிக்க தேவைப்படும் தகுதி:

  1. விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  3. மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
  4. மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.
  5. மேலும் நீங்கள் இந்த B.sc Bioinformatics பட்டப்படிப்பை படிப்பதற்கு நிறுவனங்களால் வைக்கப்படும் நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

12-வகுப்பு முடித்துவிட்டு B.sc Forestry பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Bioinformatics Course Subject in Tamil:

  1. Introduction to Bioinformatics
  2. Computer Fundamentals
  3. Statistical Methods 
  4. Introduction to Databases
  5. Cell Biology
  6. Biochemistry 
  7. Genetics
  8. Operating System & Programming in C
  9. Introduction to Genome Projects
  10. Information Networks
  11. Object-oriented analysis & design models
  12. Probability
  13. Techniques in Biochemistry
  14. Nucleotide Metabolism & Bioenergetics
  15. Working with a single DNA Sequence
  16. Working with a single protein Sequence
  17. Object-Oriented Programming in C++
  18. Sampling Distribution
  19. Molecular Biology
  20. Immunology

B.sc Bioinformatics பட்டப்படிப்பில் நீங்கள் மேலே கூறியுள்ள பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

B.sc Physiotherapy பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Bioinformatics படித்தால் என்ன வேலை கிடைக்கும்:

B.sc Bioinformatics என்பது விஞ்ஞானத்தின் வளர்ந்து வரும் துறையாகும் மற்றும் இந்த துறையில் தொழில் வாய்ப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. B.sc Bioinformatics பட்டம் பெற்றவர்கள் மருந்து, பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல், ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றலாம்.

மூலக்கூறு உயிரியலின் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் அனைத்துத் தொழில் துறைகளிலும் பணியாற்றலாம்.

B.sc Bioinformatics Higher Studies in Tamil:

B.sc Bioinformatics-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விருப்பினீர்கள் என்றால்,

  1. M.sc Bioinformatics
  2. Advance Diploma in Bioinformatics
  3. Advance Post Graduate Diploma in Bioinformatics
  4. Certificate Course in Bio Perl Programming
  5. Diploma in Bioinformatics
  6. M Sc Bioinformatics
  7. M Sc Biotechnology
  8. Post Graduate Diploma in Bioinformatics

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

B.sc Biotechnology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement