B.sc Biotechnology Course Details in Tamil
நான் பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல், கணிதம் பாடம் எடுத்து படித்து முடித்துள்ளேன். படிப்பில் சராசரி மாணவன் தான். பிளஸ் டூவில் சாதாரணமாகவே படித்துள்ளேன். அடுத்ததாக உயிரியல் சார்ந்த B.sc Biotechnology பட்டப்படிப்பில் சேரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களும் அந்த பட்டப்படிப்பை படிக்காத அது மிகவும் கடினமானது ஒரு பட்டப்படிப்பு மற்றும் அதனை படித்தால் வேலை வாய்ப்பும் அவ்வளவாக இருக்காது என்று பயமுறுத்துகிறார்கள்.
அதனால் நான் B.sc Biotechnology பட்டப்படிப்பு படிக்கலாமா.? வேண்டாமா..? என்று சிந்தனை செய்பவர்களுக்காகத் தான் இன்றைய பதிவில் B.sc Biotechnology பட்டப்படிப்பு பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> B.sc Zoology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
B.sc Biotechnology Course in Tamil:

B.sc Biotechnology என்பது இளங்கலை உயிரி தொழில்நுட்பவியல்
என்றும், Bachelor of Science in Biotechnology என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Biotechnology என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.
மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் B.sc Biotechnology படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.
B.sc Biotechnology Course படிக்க தகுதி:
- விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
- மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.
B.sc Biotechnology Course Subject in Tamil:
- Microbiology
- Animal Biotechnology
- Principal of Biotechnology Applied to Plants and Animals
- Biophysical Chemistry
- Virology
- Inorganic Chemistry
- Enzyme technology
- Immunology
- Biochemistry
- Environmental Biotechnology
- Biofertilizer Technology
- Analytical Techniques and Bioinformatics
- Bioenergetics
- Molecular biology
மேலே கூறப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல், இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு இதனை படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
Bsc Biotechnology படித்தால் என்ன வேலை கிடைக்கும்:
B.sc Biotechnology படித்தவர்களுக்கு அறிவியல் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் அநேக வேலைவாய்ப்புகள் உண்டு. மேலும் விவசாயம், கால்நடை பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரபணு பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
Higher Studies After B.sc Biotechnology in Tamil:
B.sc Biotechnology-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விருப்பினீர்கள் என்றால்,
- M.sc Biotechnology
- M.sc Biochemistry
- M.sc Botany
- M.sc Zoology
- M.sc Cell Biology
- M.sc Molecular Biology
- M.Sc in Toxicology
- M.Sc Microbiology
- M.Sc in Animal biotechnology
- M.Sc in Molecular medicines
- Masters in Public Health
- M.Sc Bioinformatics
- M.Sc in Applied Biology
- M.Sc in Virology
- M.Sc Forensic Science
- M.Sc Nanotechnology
- M.Sc in Pharmacology
- M.Sc in Industrial Biotechnology
போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
சம்பள விவரங்கள்:
இந்தியாயவில் B.SC Bio Technology சம்பளம் அவருடைய திறன் மற்றும் அனுபவத்தின் கீழ் வழங்கபடுகிறது. அதாவது தொடக்க நிலையில் உள்ள ஒருவர் வருடத்திற்கு தோராயமாக 2.5 முதல் 5 லட்சம் வரை ரூபாய் சம்பளம் பெறலாம்.
மேலும், அத்தொழிலில் அனுபவம் பெற்ற ஒருவர் வருடத்திற்கு தோராயமாக 7 முதல் 15 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> B.sc chemistry படிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா..?
| இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |














