12-வகுப்பு முடித்துவிட்டு B.sc Forestry பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

B.sc Forestry Course Details in Tamil

நான் பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல், கணிதம் பாடம் எடுத்து படித்து முடித்துள்ளேன். படிப்பில் சராசரி மாணவன் தான். பிளஸ் டூவில் சாதாரணமாகவே படித்துள்ளேன். அடுத்ததாக B.sc Forestry பட்டப்படிப்பில் சேரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களும் அந்த பட்டப்படிப்பை படிக்காத அந்த பட்டப்படிப்பதற்கு மிகவும் பொறுமையும் நிதானமும் தேவை மற்றும் அதனை படித்தால் வேலை வாய்ப்பும் அவ்வளவாக இருக்காது என்று பயமுறுத்துகிறார்கள்.

அதனால் நான் B.sc Forestry பட்டப்படிப்பு படிக்கலாமா.? வேண்டாமா..? என்று ஒரே குழப்பமாக உள்ளது என்பவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் B.sc Forestry பட்டப்படிப்பு பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ B.sc Physiotherapy பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Forestry Course in Tamil:

B.sc Forestry Course in Tamil

B.sc Forestry என்பது இளங்கலை வனவியல் என்றும், Bachelor of Science in Forestry என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Forestry என்பது 4 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.

மேலும் இது 8 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் B.sc Forestry படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

B.sc Forestry படிக்க தேவைப்படும் தகுதி:

  1. விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  3. மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
  4. மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ B.sc Biotechnology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

B.sc Forestry Course Subject in Tamil:

  1. Fundamentals of Soil Science
  2. Agrometeorology
  3. Introductory Economics
  4. Cytology and Genetics
  5. Tribology and Anthropology
  6. Fundamentals of Horticulture
  7. Spoken English and Grammar
  8. Introductory Crop Physiology
  9. Principles and Practices of Silviculture
  10. Principles of Hydrology, Soil and Water Conservation
  11. Plantation Forestry
  12. Chemistry and Fertility of Forest Soils
  13. Dendrology
  14. Environmental Science
  15. Biodiversity and Ecology

B.sc Forestry படித்தால் என்ன வேலை கிடைக்கும்:

BSc வனவியல் பட்டதாரிகள் தங்கள் படிப்பை முடித்த பிறகு பல்வேறு நிறுவனங்களில் எளிதாக வேலை பெறலாம். அதாவது விலங்கியல் பூங்காக்கள், வனவிலங்கு வரம்புகள், வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்ற பல வேலைகள் கிடைக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ B.sc Zoology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

B.sc Forestry Higher Studies in Tamil:

B.sc Forestry-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விருப்பினீர்கள் என்றால்,

  1. Master of Science in Agro Forestry
  2. Master of Science in Forest Products
  3. Master of Science in Silviculture
  4. Master of Science in Soil Science and Water Management
  5. Master of Science in Tree Improvements
  6. Master of Science in Wood Science & Technology
  7. Doctor of Philosophy in Agro Forestry
  8. Doctor of Philosophy in Animal Biochemistry
  9. Doctor of Philosophy in Animal Biotechnology
  10. Doctor of Philosophy in Animal Husbandry/ Animal Husbandry and Drying

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ B.sc Microbiology பட்டப்படிப்பு பற்றிய தகவல்

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement