B.sc Microbiology Course Details in Tamil
நான் பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல், கணிதம் பாடம் எடுத்து படித்து முடித்துள்ளேன். படிப்பில் சராசரி மாணவன் தான். பிளஸ் டூவில் சாதாரணமாகவே படித்துள்ளேன். அடுத்ததாக உயிரியல் சார்ந்த B.sc Microbiology பட்டப்படிப்பில் சேரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களும் அந்த பட்டப்படிப்பை படிக்காத அது மிகவும் கடினமானது ஒரு பட்டப்படிப்பு மற்றும் அதனை படித்தால் வேலைவாய்ப்பும் அவ்வளவாக இருக்காது என்று பயமுறுத்துகிறார்கள். அதனால் நான் B.sc Microbiology பட்டப்படிப்பு படிக்கலாமா..? வேண்டாமா..? என்று சிந்தனை செய்பவர்களுக்காகத் தான் இன்றைய பதிவில் B.sc Microbiology பட்டப்படிப்பு பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்
Bsc Microbiology Course in Tamil:
B.sc Microbiology என்பது இளங்கலை நுண்ணுயிரியல் என்றும், Bachelor of Science in Microbiology என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Microbiology என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.
மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. Microbiology என்பது நுண்ணுயிரிகளான பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தடுப்பு மருந்துகள், மருத்துவ குணங்கள் சார்ந்த படிப்பாகும்.
நீங்கள் B.sc Microbiology படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc chemistry படிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா
B.sc Microbiology Course படிக்க தகுதி:
- விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் உயிரியல், இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
- மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.
B.sc Microbiology Course Subject in Tamil:
இந்த B.sc Microbiology-ல் அனைத்து அடிப்படை உயிரியல் சாரா அம்சங்களையும் படிக்க வேண்டியிருக்கும்.
- Priniciples of Microbiology
- Principles of Transmission Genetics
- Organic Mechanisms in Biology
- Molecular Biology
- General Microbiology
- Microbial Physiology
- Basics and Applied Immunology
- Bioinformetics
- Basic Genetics
- Basic Tissue Culture
- Cell Structure
- Medical Virology
- Medical Bacteriology
- Bio Instrumentation
- Economic Entomology
மேலே கூறப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல், இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு இதனை படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
Bsc Microbiology படித்தால் என்ன வேலை கிடைக்கும்:
B.sc Microbiology படித்தவர்களுக்கு அறிவியல் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் அநேக வேலைவாய்ப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக பாராமெடிக்கல், ஆய்வகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆராய்ச்சிக் கூடங்கள், சுற்றுச்சுழல் ஆணையம், உணவு தொழிற்சாலை, கெமிக்கல் தொழிற்சாலை மற்றும் வேளாண் துறை போன்ற துறைகளில் அநேக வேலைவாய்ப்புகள் உண்டு.
மேற்படிப்பு:
B.sc Microbiology -யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விரும்பினார்கள் என்றால்,
- BiologicalChemistry
- Agricultural Microbiology
- Bacteriology & Virology
- Engineering &Bioinformatics &Computational Methods
- BiophysicalTechniques & Instrumentation
- Bioinformatics & Computational Methods
- Microbial Physiology& Molecular Biology
- Bioprocess Technology & Agricultural Microbiology
- Advanced Immunology
- Bioprocess Technology
- Environmental Microbiology Medical Microbiology
- Microbial Technology
- Cell biology & Enzymology
- Principlesof Microbiology
போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
இதையும் படித்துப்பாருங்கள்=> B.Com Course பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |