B.Sc Nursing பட்டப்படிப்பு பற்றிய தகவல்..!

Advertisement

B.Sc Nursing Course Details in Tamil

நான் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளேன். படிப்பில் சராசரி மாணவன் தான். பிளஸ் டூவில் சாதாரணமாகவே படித்துள்ளேன். அடுத்து என்ன பட்டப்படிப்பு படிப்பது என்று தெரியவில்லை. ஆனால் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள் B.Sc Nursing பட்டப்படிப்பினை படி நல்ல மதிப்புள்ளது என்கிறார்கள். ஆனால் B.Sc Nursing பட்டப்படிப்பு படிப்பதற்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. இப்பொழுது நான் B.Sc Nursing பட்டப்படிப்பு படிக்கலாமா..? வேண்டாமா..? என்று சிந்தனை செய்பவர்களுக்காக தான் இன்றைய பதிவில் B.Sc Nursing பட்டப்படிப்பு பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>B.sc Microbiology பட்டப்படிப்பு பற்றிய தகவல்

B.Sc Nursing Course Details in Tamil:

B.Sc Nursing Course Details in Tamil

B.Sc Nursing என்பது இளங்கலை நர்சிங் என்றும், Bachelor of Science in Nursing என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Nursing என்பது 4 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.

நர்சிங் மருத்துவத்தை முதன்மை செயல்பாடுகளாக கையாளுகிறது. நீங்கள் B.sc Nursing படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

B.sc Nursing Course படிக்க தகுதி:

  1. விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  3. மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றியிருந்தால்  இந்த படிப்பை படிக்க முடியும்.
  4. மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc chemistry படிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா

B.sc Nursing Course Subject in Tamil:

  1. Physiology
  2. Nursing Foundations
  3. Nutrition
  4. Biochemistry
  5. Microbiology
  6. Community Health Nursing
  7. Child Health Nursing
  8. Management of Nursing Services and Education
  9. Introduction to computers
  10. Pharmacology
  11. Sociology
  12. Midwifery and Obstetrical Nursing
  13. Pathology and Genetics
  14. Medical-Surgical Nursing
  15. Mental Health Nursing
  16. Nursing Research and Statistics.

Bsc Nursing படித்தால் என்ன வேலை கிடைக்கும்:

B.sc Nursing படித்தவர்களுக்கு மருத்துவம் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் அநேக வேலைவாய்ப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக வீட்டு பராமரிப்பு செவிலியர்கள், நர்சிங் உதவியாளர், நர்ஸ் – நர்சரி பள்ளி செவிலியர் & நோயாளி கல்வியாளர், ராணுவ செவிலியர் மற்றும் ஜூனியர் மனநல செவிலியர் போன்ற வேலைவாய்புகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மேற்படிப்பு:

B.sc Nursing -யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விரும்பினீர்கள் என்றால்,

  1. M.Sc Nursing
  2. M.Sc Biochemistry
  3. M.Sc Biotechnology 
  4. Diploma in Critical Care Nursing
  5. Diploma in Nursing Administration
  6. PG Diploma in Emergency nursing.

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.Com Course பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement