B.sc Physiotherapy Course Details in Tamil
நான் பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல், கணிதம் பாடம் எடுத்து படித்து முடித்துள்ளேன். படிப்பில் சராசரி மாணவன் தான். பிளஸ் டூவில் சாதாரணமாகவே படித்துள்ளேன். அடுத்ததாக B.sc Physiotherapy பட்டப்படிப்பில் சேரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களும் அந்த பட்டப்படிப்பை படிக்காத அந்த பட்டப்படிப்பதற்கு மிகவும் பொறுமை தேவை மற்றும் அதனை படித்தால் வேலை வாய்ப்பும் அவ்வளவாக இருக்காது என்று பயமுறுத்துகிறார்கள்.
அதனால் நான் B.sc Physiotherapy பட்டப்படிப்பு படிக்கலாமா.? வேண்டாமா..? என்று ஒரே குழப்பமாக உள்ளது என்பவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் B.sc Physiotherapy பட்டப்படிப்பு பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> B.sc Biotechnology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
B.sc Physiotherapy Course in Tamil:
B.sc Physiotherapy என்பது இளங்கலை உடற்பயிற்சி சிகிச்சை என்றும், Bachelor of Science in Physiotherapy என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Physiotherapy என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.
மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் B.sc Physiotherapy படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.
B.sc Physiotherapy Course படிக்க தகுதி:
- விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
- மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> B.sc Zoology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
B.sc Physiotherapy Course Subject in Tamil:
- Physiology
- Basic Nursing
- Pathology
- Biomechanics
- Pharmacology
- Allied Therapies
- Community Medicine
- Electrotherapy
- Orthopedics and Sports Physiotherapy
- Biochemistry
- Psychology
- Orientation of Physiotherapy
- Sociology
- Exercise Therapy
- General Medicine
- Basics of Neurology
- Introduction to Treatment
- Evidence-based Physiotherapy and Practice
- First Aid and CPR
- Microbiology
B.sc Physiotherapy படித்தால் என்ன வேலை கிடைக்கும்:
B.sc Physiotherapy படித்தால் மருத்துவத்தில் அரசு மற்றும் தனியார் துறையிலும் அநேக வேலைவாய்ப்புகள் உள்ளது. மேலும் நீங்களே சொந்தமாக ஒரு கிளினிக் திறக்கலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> B.sc Microbiology பட்டப்படிப்பு பற்றிய தகவல்
Higher Studies After B.sc Physiotherapy in Tamil:
B.sc Physiotherapy-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விருப்பினீர்கள் என்றால்,
- M.Sc. in Physiotherapy
- Master of Physiotherapy (Neurology)
- M.D. in Physiotherapy
- Master of Physiotherapy in Sports Physiotherapy
- PG Diploma in Sports Physiotherapy
- PhD in Physiotherapy
போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்..!
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |