12-வகுப்பு முடித்து விட்டு B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!

B.sc Radiology Course Details in Tamil

B.sc Radiology Course Details in Tamil

நான் பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல், கணிதம் பாடம் எடுத்து படித்து முடித்துள்ளேன். படிப்பில் சராசரி மாணவன் தான். பிளஸ் டூவில் சாதாரணமாகவே படித்துள்ளேன். அடுத்ததாக B.sc Radiology பட்டப்படிப்பில் சேரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களும் அந்த பட்டப்படிப்பை படிக்காத அந்த பட்டப்படிப்பை படித்தால் வேலை வாய்ப்பு அவ்வளவாக இருக்காது என்று பயமுறுத்துகிறார்கள்.

அதனால் நான் B.sc Radiology பட்டப்படிப்பு படிக்கலாமா.? வேண்டாமா..? என்று ஒரே குழப்பமாக உள்ளது என்பவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் B.sc Radiology பட்டப்படிப்பு பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

12-வகுப்பு முடித்துவிட்டு B.sc Forestry பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Radiology Course in Tamil:

B.sc Radiology Course in Tamil

B.sc Radiology என்பது இளங்கலை கதிரியக்கவியல் என்றும், Bachelor of Science in Radiology என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Radiology என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.

மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் B.sc Radiology படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

B.sc Radiology படிக்க தேவைப்படும் தகுதி:

  1. விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  3. மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
  4. மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.
  5. மேலும் நீங்கள் இந்த B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு நிறுவனங்களால் வைக்கப்படும் நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

B.sc Physiotherapy பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Radiology Course Subject in Tamil:

  1. Pathology
  2. Anatomy
  3. Physiology
  4. Generation and Properties of X-Ray
  5. Fundamentals of Radiology and Computer Science
  6. General Radiography
  7. Radiation Hazards and Protection
  8. Personality Development and Communication Skills
  9. CT Scan 1
  10. General Radiography 2
  11. Ultrasound
  12. Environmental Science
  13. MRI 1
  14. Organisational Behaviour
  15. MRI 2
  16. Nuclear Medicine and PET Scan
  17. CT Scan 2
  18. Doppler and Echography
  19. Human Resources
  20. Intervention in Diagnostic Radiology
  21. Anaesthesia in Diagnostic Radiology

B.sc Biotechnology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

B.sc Radiology படித்தால் என்ன வேலை கிடைக்கும்:

B.Sc கதிரியக்கவியல் பட்டதாரிகள் தங்கள் படிப்பை முடித்த பிறகு பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் எளிதாக வேலை பெறலாம். அதே போல் அரசின் மருத்துவ துறையிலும் வேலை பெறலாம்.

மேலும் பல மருத்துவ நிறுவனங்களில் கதிரியக்க நிபுணர், இமேஜிங் டெக்னீஷியன், நியூக்ளியர் மெடிசின் டெக்னாலஜிஸ்ட், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர், கதிரியக்க செவிலியர், கதிரியக்க உதவியாளர், அல்ட்ராசவுண்ட் டெக்னீஷியன், எம்ஆர்ஐ டெக்னீஷியன், சோனோகிராஃபர், CAT ஸ்கேன் நிபுணர், CT ஸ்கேன் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ரேடியாலஜிஸ்ட் டெக்னீஷியன் போன்ற வேலைகளையும் பெறலாம்.

B.sc Radiology Higher Studies in Tamil:

B.sc Radiology-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விருப்பினீர்கள் என்றால்,

  1. MSc Radiology
  2. MSc Medical Radiation Physics
  3. PGD in Radiotherapy Technology
  4. PGD in X-ray Radiography
  5. PGD in Ultra-Sonography
  6. Master of Magnetic Resonance Technology
  7. Master of Radiopharmaceutical Science
  8. Master of Medical Radiation – Nuclear Radiation

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

B.sc Zoology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி