B.sc Statistics பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

B.sc Statistics Course Details in Tamil

பொதுவாக 12-ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அடுத்து என்ன படிப்பது என்று மிகவும் குழப்பமாக இருக்கும். அதாவது நீங்கள் ஏதாவது ஒரு படிப்பை படிக்கலாம் என்று தேர்வு செய்வீர்கள் ஆனால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேறு சில படிப்புகளின் சிறப்புகளை கூறி அதனை தேர்வு செய்து படித்தால் உனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறுவார்கள். எனவே உங்களுக்கு அடுத்து என்ன உயர்கல்வி படிப்பது என்பதில் பெரிய குழப்பம் ஏற்படும். எனவே தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பட்டப்படிப்பு பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அதாவது அந்த பட்டப்படிப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் அதனை படித்தால் உங்களுக்கு எந்த மாதிரியான பணிகள் கிடைக்கும் போன்றவற்றை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் B.sc Statistics பட்டப்படிப்பை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

12-வகுப்பு முடித்து விட்டு B.sc Bioinformatics பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Statistics Course in Tamil:

B.sc Statistics Course in Tamil

B.sc Statistics என்பது இளங்கலை உயிர் புள்ளியியல் என்றும், Bachelor of Science in Statistics என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Statistics என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.

மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டபடிப்பானது புள்ளியியல் துறையை உள்ளடக்கியது, இது பல்வேறு புள்ளியியல் பயன்பாடுகளைச் சமாளிப்பதற்குத் தேவையான சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் கணிதப் புரிதலுடன் மாணவர்களைச் அளிக்கின்றது.

நீங்கள் B.sc Statistics படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

B.sc Statistics படிக்க தேவைப்படும் தகுதி:

  1. விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  3. மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
  4. மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.
  5. மேலும் நீங்கள் இந்த B.sc Statistics பட்டப்படிப்பை படிப்பதற்கு நிறுவனங்களால் வைக்கப்படும் நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

12-வகுப்பு முடித்து விட்டு B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Statistics Course Subject in Tamil:

  1. Inequalities
  2. Demoivre’s theorem
  3. Equations theories, Fundamental theorem of algebra and its consequences. 
  4. Differential Calculus
  5. Review of Differential Equations
  6. Review of Integration and Definite Integrals
  7. Probability Theory
  8. Statistical Methods
  9. Random Variables
  10. Expectation of Random Variable and its Properties
  11. Measures of Location (or Central Tendency) and Dispersion
  12. Index Numbers
  13. Mathematical Finance
  14. Utility and Production Functions
  15. Time Series
  16. Demand Analysis
  17. Stratified Random Sampling
  18. Fundamental Theorem of Algebra and its Consequences
  19. Basic Sampling Methods
  20. Sample Surveys
  21. Numerical Analysis
  22. Inverse Interpolation
  23. General Linear Models
  24. Numerical Integration

B.sc Statistics பட்டப்படிப்பில் நீங்கள் மேலே கூறியுள்ள பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

B.sc Physiotherapy பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

B.sc Statistics படித்தால் என்ன வேலை கிடைக்கும்:

B.sc Statistics படித்தால் நிதித் துறை, வங்கித் துறை, கல்வித் துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் தரவு ஆய்வாளர், நிதி ஆய்வாளர், ஆய்வாளர் தரகு மற்றும் நிதி கணக்காளர் போன்ற பணிகள் கிடைக்கும்.

மேலே கூறிய அனைத்து பணிகளுக்கும் தோராயமாக 5,00,000 முதல் 8,00,000 வரை சமபளம் கிடைக்கும்.

B.sc Statistics Higher Studies in Tamil:

B.sc Statistics-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விருப்பினீர்கள் என்றால்,

  1. M.Sc. Statistics
  2. Bachelor of Education (B.Ed)
  3. M.Sc. Actuarial science
  4. M.Sc. Library and Information Science
  5. M.Sc. Quantitative Economics
  6. Master of Computer Applications (MCA)
  7. M.Sc. Mathematics
  8. MBA
  9. Post Graduate Diploma in Statistical Methods with Applications
  10. Specialist Development Program in Statistical Quality Control (SQC)
  11. JRF & SRF Rules

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

B.sc Biotechnology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement