B.Tech IT Course Details in Tamil
இன்றைய காலத்தை பொறுத்தவரை படிப்பு தான் எல்லாமும் என்பது போல் ஆகிவிட்டது. ஏனென்றால் நாம் கற்றுக்கொள்ளும் படிப்பு மற்றும் மற்ற விஷயங்களை பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கையினை எதிர்க்கொள்ள முடியும் என்பது நடைமுறையாக வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக படிப்பு என்பது நமது வாழ்க்கையினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு அடித்தளமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட படிப்பினை பற்றி ஒவ்வொருவர் மனதிலும் நிறைய எண்ணங்கள் இருக்கும். ஏனென்றால் அப்போது தான் நாம் எந்த மாதிரியான பிரிவினை எடுத்து படிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ள முடியும். ஆனால் நாம் படிக்க விரும்பும் பிரிவினை பற்றி நமக்கு முன்னதாக ஓரளவு தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று தான் அனைவரும் யோசிக்கின்றனர். அந்த வகையில் இன்று B.Tech IT படிப்பு பற்றிய முழுத்தகவலையும் தெரிந்துக்கொள்ள போகிறோம். நீங்களும் இந்த B.Tech IT Course படிக்க போகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்..! |
B.Tech IT Course in Tamil:
B.Tech IT என்பது Bachelor of Technology in Information Technology என்று முழு விரிவாக்கத்துடன் அழைக்கப்படுகிறது.
இத்தகைய தொழிநுட்பம் சார்ந்த படிப்பை நீங்கள் படிப்பதற்கு தேர்வு செய்தீர்கள் என்றால் 4 வருடம் கல்லூரி படிப்பு மற்றும் 8 Semester தேர்வுகள் எழுத வேண்டியிருக்கும்.
இந்த B.Tech IT படிப்பானது அனைத்து கல்லூரிகளும் இருக்காது. அதனால் நீங்கள் நல்ல தரமுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தினை தேர்வு செய்து படிக்க வேண்டும். அதேபோல இதனுடைய கட்டண தொகை ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடும்.
B.Tech IT Course படிக்க தேவையான பகுதி:
B.Tech IT Course உங்களுக்கு படிக்க விருப்பம் இருந்தால் நீங்கள் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் கணினி பிரிவினை ஒரு பாடமாக எடுத்து படித்து பொதுத்தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி பிரிவினை ஒரு பாடமாக எடுத்துப்படிப்பதன் மூலம் கணினி பற்றிய அடிப்படை தகவல்களை நீங்கள் கற்றுக்கொள்வது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அதேபோல கணினியை பற்றி மேலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மற்றும் தகுதியினை வளர்த்து கொள்ள வேண்டும்.
இந்த படிப்பினை படிக்கும் போதே Cloud Computing, Web Designing, Program Coding மற்றும் Database Architecture போன்ற Skil Knowledge- ஐ நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
B.sc Computer Science படிப்பு பற்றிய தகவல்..! |
B.Tech IT Course படித்தால் என்ன வேலை கிடைக்கும்:
Programmer, Graphic Designer, Software Developer, Quality Analyst, Software Creator, IT Specialist, விண்வெளி ஆய்வு துறை, Biotechnology, College Professor மற்றும் Data Analyst ஆகிய வேலைகள் நீங்கள் B.Tech IT Course முடித்து இருந்தால் உங்களுக்கு கிடைக்கும்.இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |