B.Voc Course Details
கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற பழமொழிக்கு முதல் உதாரணமாக இருப்பது கல்வி தான். இத்தகைய கல்வியினை கற்றோர் கண் உடையவர் என்றும், கல்லாதவர் முகத்தில் புண் உடையோர் என்றும் மிகவும் சிறப்பாக திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் கல்வியின் முக்கியத்துவம் என்பது நமக்கு இப்போது தான் தெரிந்து இருக்கிறது. ஆனால் திருவள்ளுவரோ இதனை முன்பே கணித்து மிகவும் சுருக்கமாக 1 1/2 அடியில் கூறியுள்ளார். அந்த வகையில் இன்றையக் கால தலைமுறையினர் பெரும்பாலும் கல்வியினை அவர் அவருக்கு பிடித்த முறையில் ஈஸியாக படிக்குறார்கள். இவ்வாறு நாம் எந்த படிப்பினை படித்தாலும் அந்த படிப்பு பற்றியும், அதில் உள்ள முக்கியத்துவம் பற்றியும் அறிந்து படிப்பது இன்னும் கற்பதற்கு எளிமையாக இருக்கும். எனவே இன்று B.Voc படிப்பு பற்றிய விவரங்களை தான் பார்க்கப்போகிறோம்.
Bsc Agriculture படிப்பு பற்றிய தகவல்கள்..
B.Voc படிப்பிற்கான தகுதி:
- B.Voc படிப்பினை படிக்க வேண்டும் என்றால் நீங்கள் 10,11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்பினை படித்து அதில் தேர்ச்சி பெற்றவராகவும் 50 முதல் 60% வரை மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
- மேலே சொல்லப்பட்டுள்ள தகுதியினை உடைய நபர்கள் யாராக இருந்தாலும் B.Voc படிப்பிற்கான MHT CET, CUCET, IPUCET ஆகிய நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
- நுழைவு தேர்வு என்பது நீங்கள் தேர்வு செய்யும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியினை பொறுத்து அமையும்.
B.Voc எத்தனை வருட படிப்பு:
- இத்தகைய படிப்பு 3 வருட கல்லூரி படிப்பு ஆகும். மேலும் இந்த 3 வருடத்தில் ஒரு நபர் மொத்தமாக 6 செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும்.
- அதேபோல் கல்லூரி கட்டணம் என்பது நீங்கள் தேர்வு செய்யும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியினை பொறுத்தே அமையும்.
முக்கிய பாடத்திட்டம்:
- Principles of Management
- Human Resource Development
- Aptitude & Logical Reasoning
- Mathematics
- Business Informatics
- Managerial Economics
- Environmental Studies
- Business Statistics
- Management Information Systems
- Financial Accounting
மேலே கூறியுள்ள பாடங்களை மையமாக வைத்தே இதர பாடப்பிரிவுகள் காணப்படும்.
விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா |
B.Voc என்றால் என்ன.?
- B.Voc என்பதற்கு முழு விரிவாக்கம் Bachelor of Vocational Degree என்பதாகும்.
- ஒரு வர்த்தகத்திற்கு நமக்கு தேவையான அனைத்து விதமான திறன்களையும், நவீன செயல்பாட்டினையும் மற்றும் தொழில் நுட்பங்களையும் நமக்கு அளிக்கும் முறையே Bachelor of Vocational Degree எனப்படும்.
என்ன வேலைக்கு செல்லலாம்:
Senior Marketing Manager, General Manager, Operations Manager, Senior Executive Assistant, Assistant Professor, Office Manager, Project Manager மற்றும் Administrative Manager என இத்தகைய வேலை அனைத்திற்கும் செல்லலாம்.
Bsc Information Technology படிப்பு பற்றிய தகவல்கள்
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |