BBM படிக்க விரும்பம் இருந்தால் முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

BBM Course Details 

பொதுவாக மனிதர்கள் யாரும் ஒருவரின் குணத்தினை வைத்து அவர் எப்படி என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது இல்லை. இதற்கு மாறாக ஒருவரின் கல்வி தகுதி மற்றும் இதர திறன்களை வைத்து தான் மதிப்பீடு செய்கிறார்கள். ஏனென்றால் இன்றைய காலத்தை பொறுத்தவரை ஒருவரிடம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதை விட அவர் என்ன படித்து இருக்கிறார் என்று தான் கவனிக்கிறார்கள். எனவே இவ்வளவு இன்றையமையாத இடத்தை பிடித்துள்ள கல்வியில் எண்ணற்ற பிரிவுகள் மற்றும் பாடங்கள் உள்ள எண்ணிடலடங்காதவை உள்ளது. இதில் நமக்கு என்ன படிக்க விருப்பம் இருக்கிறதோ அதனை பற்றிய முழு விவரங்களையும் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்றைய பதிவில் BBM படிப்பினை பற்றிய முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

CA படிக்க போறீங்களா… அப்போ இதை முதலில் தெரிந்துக்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள்.. 

BBM Course in Tamil:

BBM என்ற படிப்பிறகான முழு விவரம் Bachelor of Business Management என்பது ஆகும். மேலும் இந்த கோர்ஸ் ஆனது 3 வருட கல்லூரி படிப்பினை கொண்டுள்ளதாகும்.

இந்த படிப்பிற்கு 3 ஆண்டுகள் கால அளவு என்பது இருப்பதால் ஒரு வருடத்திற்கு 2 செமஸ்டர் தேர்வு என்று மொத்தம் 6 செமஸ்டர் தேர்வுகள் இடம் பெற்றிருக்கிறது.

மேலும் இந்த கல்லூரி படிப்பிற்கான கட்டணம் என்பது ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் அமையும். அதேபோல் உங்களுக்கான பாடத்திட்டம் என்பது கல்லூரிகளை பொறுத்து தான் அமையும்.

தேவையான தகுதி:

 bbm full form in tamil

நீங்கள் BBM படிப்பினை படிக்க வேண்டும் என்றால் 10, 11 மற்றும் 12 என இந்த வகுப்புகளில் எல்லாம் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் வணிகவியல் பாடங்களை ஒரு படமாக 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் படித்து இருக்க வேண்டும்.

இதில் முக்கியமாக நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியமான ஒன்று.

Bsc Agriculture படிப்பு பற்றிய தகவல்கள்.. 

BBM course subjects in Tamil:

  • Business Law
  • Accounting
  • Management
  • Ethics
  • Economics
  • Finance

மேலே சொல்லப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தினையும் வைத்து தான் மற்ற பாடங்கள் அனைத்தும் அமையும்.

BBM Course Job Opportunities:

  1. Relationship Manager
  2. Delivery Manager
  3. Financial Consultant
  4. Professor
  5. Business Operations Manager
  6. Business Analyst
  7. Probationary Officer
  8. Budget Analyst

இத்தகைய வேலைகளுக்கு நீங்கள் BBM படிப்பினை படித்து முடித்து விட்டு செல்லலாம்.

அடுத்து என்ன படிப்பது:

நீங்கள் BBM படிப்பினை படித்து முடித்துவிட்டீர்கள் என்றால் அதன் பிறகு மேல் படிக்க வேண்டும் என்று விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிப்பினை படிக்க வேண்டும்.

  • MBA
  • CA
  • PGDM
  • CS
  • M.com
  • LLB
  • CFA

இந்த படிப்பினை நீங்கள் படித்த முடித்த பிறகு பணிபுரியும் வேலைகளுக்கு ஏற்றவாறும், அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பளமானது வழங்கப்படும்.

Bsc Information Technology படிப்பு பற்றிய தகவல்கள்

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement