Best Computer Course After 12th in Tamil
ஹாய் பிரெண்ட்ஸ் வணக்கம்.. இப்போது இருக்கும் சில மாணவ மாணவிகளுக்கு மட்டும் தான் குறிக்கோள் என்பது இருக்கிறது. பலர் 12th முடித்துவிட்டு ஏதோ ஒரு கல்லூரியில் ஏதோ ஒரு பட்டத்தை படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்று புலம்புகின்றன. பள்ளி படிப்பை படித்துக்கொண்டிருக்கும் போதே சரியான திட்டமிடும் திறன் இருந்தால் நாம் புலம்ப வேண்டிய அவசியம் இருக்காது. 12th மற்றும் கல்லூரி முடித்துவிட்டு சில வகையான Computer Course படித்தால் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அந்த வகையில் அதிக டிமாண்ட் உள்ள 5 Computer Course-ஐ பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க.
Software Development:
இந்த Software Development என்பது கோடிங்கை பயன்படுத்தி டிஜிட்டல் வடிவில் ஒரு அப்ளிகேஷனில் வேலை செய்வது. அல்லது ஏதாவது Software-யில் வேலை செய்வது. அல்லது ஒரு கோடிங்கை பயன்படுத்தி ஒரு Software-ஐ Manage செய்து அவற்றில் உள்ள Data அனைத்தையும் Manage செய்வது. இது போன்ற பணிகளை செய்வது தான் Software Development வேலையாகும். இவற்றில் நிறைய பிரிவுகள் உள்ளது, அவற்றில் நீங்கள் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும் கண்டிப்பாக உங்கள் எதிர்காலம் மிகச்சிறந்ததாக அமையும். அந்த பிரிவுகளை பார்க்கலாம்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள 👇
Excel-யில் இது கூட தெரியாம இருக்குறது ரொம்ப தப்புங்க..!
Types of Software Development:
- Front end Web Development
- Back end Web Development
- Full-Stack Web Development
- Game Designer and Development
- 3D Graphics Development
- Mobile App Development
- Quality Assurance (QA) Course
- CRM Project Management Course
- Software Integration Course
- Ethical Hacking (Security) Course
- Data Science Course
- API development
- Desktop development
Blockchain Development:
Best Computer Course After 12th in Tamil – பிட்காயின் போன்ற ஆன்லைன் கரன்சிகள் Blockchain Development மூலமாகத்தான் செயல்படுகிறது. இது ஒரு பாதுகாப்பான தொழில்நுட்பம் என்று சொல்லலாம். பலவகையான பயன்பாட்டிற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். அதாவது பணம் பரிவர்த்தனை செய்ய, ஒரு இடத்தில் Data-வை Maintain செய்வதற்கு, ஒரு டேட்டாவை பாதுகாப்பாக ஸ்டோர் செய்வதற்கு என்று பலவகையான பயன்பாட்டிற்கு இந்த Blockchain Development தொழில்நுட்பம் பயன்படுகிறது.
இந்த Blockchain Development Course கற்றுக்கொள்ளும் போது உங்களுக்கு Basic of Blockchain, Java Script, Data structure Algorithm, Debugging, Basic of Programming, Python இது போன்ற பலவகையான விஷயங்களை கற்று கொடுப்பார்கள்.
இந்த Blockchain Development Course-ஐ முடித்துவிட்டால் நீங்கள் Blockchain Developer, Blockchain Project Manager, Blockchain UX Designer, Blockchain Quality Engineer, Blockchain Legal Consultant இது போன்ற பணிகளில் நீங்கள் பணிபுரியலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள 👇
தமிழ் வழி English Grammar கற்றுக்கொள்ளலாம் வாங்க..!
Artificial Intelligence & ML:
Best Computer Course After 12th in Tamil – உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் நண்பரிடம் ஆன்லைனில் ஏதாவது ஆர்டர் செய்யப்போறீங்க என்று மெசேஜ் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக FaceBook, YouTube இது போன்ற ஆப்ஸை ஓபன் செய்து பயன்படுத்தும் போது அந்த பொருட்கள் விளம்பரங்களில் காட்டப்படும்.
நீங்கள் சாதரணமாக உங்கள் நண்பரிடம் மெசேஜில் சொன்ன விஷயம் நீங்கள் பயன்படுத்தும் FB, YouTube இது போன்றவற்றில் விளம்பரமாக காட்டப்படுவது எப்படி என்றால் இந்த Artificial Intelligence & ML தொழில்நுட்பம் மூலம் தான். இது மட்டும் இல்லாமல் ஆர்டிபிசியலாக ரோபோட், ஆர்டிபிசியலாக Self Driving Car இதுபோன்ற அம்சங்கள் எல்லாம் வந்துவிட்டது. ஆக இந்த Course-ஐ நீங்கள் கற்றுக்கொள்ளும்போது நல்ல எதிர்காலத்தை நீங்கள் அமைத்துக்கொள்ளமுடியும்.
Software Testing Course:
இந்த Software Testing என்பது ஒரு Software-ஐ Testing செய்வது தான் Software Testing ஆகும். அதாவது ஒரு Software-யில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சரி செய்வது, Verify செய்வது இது போன்ற பணிகள் தான் இருக்கும். இந்த Course படித்தாலும் நன்றாக சம்பாதிக்கலாம்.
இந்த Software Testing Course கற்றுக்கொள்ளும் போது உங்களுக்கு Basic Software Programming, Java, Script, Front end Back end Programming இதுபோன்ற நிறைய விஷயங்கள் கற்று கொடுப்பார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள 👇
Excel-யில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான Formula
Microsoft Excel Course:
Best Computer Course After 12th in Tamil – பொதுவாக அனைவருமே இந்த Microsoft Excel Course-ஐ கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அனைத்து நிறுவனங்களிலுமே இந்த Microsoft Excel-ஐ பயன்படுத்துவார்கள். ஏன் என்றால் Company-யில் உள்ள முக்கியமான டேட்டாவை Maintain செய்வதற்கு இந்த Microsoft Excel மிகவும் பயன்படுகிறது. ஆக இந்த Course படித்தாலும் உங்களுக்கு வேலை தேடும் போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |