10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்துட்டா..! அப்போ அடுத்து என்ன படிக்க போறீங்க..?

Advertisement

Best Top 5 Courses After 10th in India 

பொதுவாக படிக்கும் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வகுப்புகளுக்கு ரிசல்ட் வந்த பிறகு அடுத்து என்ன படிப்பது..? என்ற கேள்வி தான் முதலில் தோன்றும். ஏனென்றால் நாம் இவ்வாறு தேர்வு செய்து படிக்கும் படிப்பை பொறுத்து தான் நம்முடைய எதிர்காலம் அமையும் என்ற பயம் அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக தான் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து உள்ளது. இத்தகைய ரிசல்டிற்கு பின்பு அடுத்து என்ன படிக்கலாம்..? என்ன படித்தால் கைநிறைய அதிக சம்பளம் பெறலாம்..? என்று யோசித்து கொண்டே நேரத்தை வீணடித்து கொண்டிருப்பீர்கள். இதுபோன்ற குழப்பத்தில் அல்லது யோசனையில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும். அதனால் பதிவை தொடர்ந்து படித்து 10-ஆம் வகுப்பிற்கு பிறகு படிப்பதற்கு இந்தியாவில் உள்ள சிறந்த மற்றும் டாப் 5 படிப்புகளை தெரிந்துக்கொள்ளுங்கள் மாணவர்களே..!

பாராமெடிக்கல் படிப்புகளின் பட்டியல் 

10th முடித்த பிறகு என்ன படிக்கலாம்:

  • Diploma in Business Management
  • Vocational course in Graphic Design
  • Certificate course in PC Hardware and Networking
  • Polytechnic Diploma in Engineering
  • Skill training course for Healthcare Assistant

இதர விவரங்கள்  

1. Diploma in Business Management:

10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான வேறு ஏதேனும் படிப்பினை முடித்து இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு:

  • Assistant Marketing Manager
  • HR Manager

2. Vocational course in Graphic Design:

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 40% மதிபெண்ணை பெற்று இருந்தால் இந்த படிப்பினை படிக்கலாம். மேலும் இது 1 வருடத்திற்கான படிப்பு ஆகும்.

வேலைவாய்ப்பு:

  • Graphic Designing

மேலே சொல்லப்பட்டுள்ள வேலையினை இந்தியா மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளிலும் செய்யலாம்.

3. Certificate course in PC Hardware and Networking:

இந்த படிப்பினை படிக்க விரும்பினால் நீங்கள் 10-ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் கணினி பற்றிய அடிப்படை தகவலையும் தெரிந்துருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு:

  • Network administrator
  • Security database development administrator

மேலே சொல்லப்பட்டுள்ள வேலைகள் மட்டும் இல்லாமல் பெரிய IT நிறுவனத்தில் இதர வேலைக்கும் செல்லலாம்.

அதிக சம்பளம் தரும் டாப் 15 படிப்புகள்.. மாணவர்களே சிந்திக்க வேண்டிய நேரம் இது தான்.. 

4. Polytechnic Diploma in Engineering:

இந்த படிப்பு 3 வருடத்திற்கான படிப்பு ஆகும். மேலும் இந்த படிப்பினை நீங்கள் படிக்க விரும்பினால் 10th பொதுத்தேர்வில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதில் முக்கியமாக நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியமும் இருக்கும்.

வேலைவாய்ப்பு:

  • Project Assistant
  • Junior Engineer
  • Assistant Engineer

5. Skill training course for Healthcare Assistant:

2 வருடத்திற்கான இந்த படிப்பினை நீங்கள் படிக்க வேண்டும் என்றால் அதற்கு 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பினை படித்து இருக்க வேண்டியது அவசியம்.

வேலைவாய்ப்பு:

  • Nursing In-charge
  • Infection Control Nurses
  • Community Health Nurses

மேலே சொல்லப்பட்டுள்ள படிப்பில் சில படிப்புகளுக்கு நுழைவு தேர்வு எழுத வேண்டி இருக்கும். அதேபோல் கல்வி கட்டணம் என்பது அந்தந்த நிறுவனத்தை பொறுத்தே அமையும்.

அதேபோல் இதில் கூறியுள்ள வேலைகள் அனைத்திற்கும் சம்பளம் என்பது அனுபவம் மற்றும் திறமையினை பொறுத்து வழங்கப்படும்.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement