Bsc Agriculture Course Details in Tamil
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று கூறுவார்கள். அதற்கு உதாரணம் என்றால் அது கல்வி தான். கல்வியை பொறுத்த வரை நாம் கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது. அதில் நமக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கல்வியில் நிறைய பிரிவுகளும் இருக்கிறது. அத்தகைய பிரிவுகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரிவு என்றால் அது Bsc Agriculture படிப்பு தான். நிறைய மாணவர்களுக்கு இந்த படிப்பினை படிக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். ஆனால் இந்த பிரிவினை படிக்க தேவையான தகுதி மற்றும் பிற விவரங்கள் தெரியாமல் இருப்பதால் அதற்கு அடுத்தாக உள்ள பிரிவினை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறரர்கள். ஆகாயம் இன்று நமது கல்வி பதில் Bsc Agriculture படிப்பு பற்றிய தகவலினை தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ Bsc Information Technology படிப்பு பற்றிய தகவல்கள்..!
Bsc Agriculture Course in Tamil:
Bsc Agriculture Course என்பது Bachelor of Science in Agriculture என்று முழு விரிவாக்கத்துடன் அழைக்கப்படுகிறது.
இந்த Bsc Agriculture படிப்பினை நீங்கள் படிக்க தேர்வு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு 4 வருடம் கல்லூரி படிப்பு மற்றும் 8 செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.
ஆனால் நீங்கள் படிக்க விரும்பும் இத்தகைய பாடப்பிரிவானது அனைத்து கல்லூரிகளிலும் இருக்காது. அதனால் முதலில் Bsc Agriculture பிரிவு இருக்கும் கல்லூரியை தேர்வு செய்து அங்கு படிக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு ஏற்றவாறு கட்டண தொகை வேறுபாடும். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிப்பது மிகவும் அவசியம்.
Bsc Agriculture Course என்ன தகுதி வேண்டும்..?
Bsc Agriculture படிப்பினை நீங்கள் படிக்க விரும்புனீர்கள் என்றால் 11-ஆம் வகுப்பில் இயற்பியல், உயிரியல், தாவரவியல் மற்றும் வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்து 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படித்து இருக்க வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ..! |
Bsc Agriculture Course-ல் உள்ள துறை:
- Principles of Crop Production
- Elements of Genetics
- Elementary Crop Physiology
- Fundamentals of Soil Science
- Agricultural Meteorology
- Livestock Production and Management
- Introduction to Plant Biotechnology
- Principles of Plant Breeding
- Introductory Plant Physiology
- Silviculture
Bsc Agriculture படிப்பில் மொத்தம் 10 வகையான துறைகள் காணப்படுகிறது. உங்களுக்கு எந்த துறையில் படிக்க ஆர்வம் இருக்கிறதோ அதனை தேர்வு செய்து படிக்கலாம்.
Bsc Agriculture Course என்ன வேலை கிடைக்கும்:
Agriculture Officer, Agricultural Research Scientist, Agriculture Technician, Business Development Executive, Assistant Plantation Manager, Agriculture Development Officers, Agriculturists மற்றும் Marketing Executive போன்ற வேலைகளுக்கு நீங்கள் Bsc Agriculture படிப்பு படித்தால் போகலாம்.Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்..! |
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |