B.Sc Botany பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்..!

Advertisement

B.Sc Botany Course Details in Tamil

நான் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டேன் பொதுத் தேர்வின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கேன். ஆனால் அடுத்து என்ன மேற்படிப்பு படிப்பது என்பதில் எனக்கு மிகப்பெரிய குழப்பம் உள்ளது. இந்த குழப்பம் 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான குழப்பம் தான். அப்படி உங்களுக்கு உள்ள குழப்பங்களை போக்குவதற்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு பட்டப்படிப்பு பற்றிய தகவல்களை பற்றி அறிந்துக் கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் B.Sc Botany பட்டப்படிப்பு பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்

B.Sc Botany Course in Tamil:

BSc Botany Course in Tamil

B.sc Botany என்பது இளங்கலை தாவரவியல் என்றும், Bachelor of Science in Botany என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Botany என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும். மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் B.sc Botany படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்துதான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc chemistry படிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா

B.sc Botany Course படிக்க தகுதி:

  • விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் இயற்பியல், வேதியல், கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
  • மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.Com Course பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா

B.sc Botany Course Subject in Tamil:

இந்த B.sc Botany-ல் அனைத்து அடிப்படை தாவரவியல் சாரா அம்சங்களையும் படிக்க வேண்டியிருக்கும்.

  1. Plant taxonomy And Embryology
  2. Diversity Of Archegoniates & Anatomy
  3. Plant Ecology & Phytogeography
  4. Cell Biology, Genetics & Plant breeding
  5. Microbial Diversity, Algae, and Fungi
  6. Algae Anatomy
  7. Bacteria
  8. Fungi Anatomy
  9. Biodiversity- Mycology, and Phytopathology
  10. Physics
  11. Research Methods
  12. Chemistry
  13. Biology

மேலே கூறப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல் அல்லது உயிரியல் பாடத்தை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு இதனை படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc Computer Science படிப்பு பற்றிய தகவல்

B.sc Botany படித்தால் என்ன வேலை கிடைக்கும்:

B.sc Botany படித்தவர்களுக்கு அறிவியல் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் அநேக வேலைவாய்ப்புகள் உண்டு.

மேலும் சூழலியலாளர், தாவர உயிர் வேதியியலாளர், தாவர ஆராய்ச்சியாளர்,சுற்றுச்சூழல் ஆலோசகர், பூங்கா ஆய்வாளர், தாவரவியலாளர், நர்சரி அல்லது கிரீன் ஹவுஸ் மேலாளர், விவசாய ஆலோசகர் மற்றும் பழங்கால தாவரவியலாளர் போன்ற பல வேலைவாய்ப்புகள் உண்டு.

மேற்படிப்பு: 

B.sc Botany-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விரும்பினீர்கள் என்றால்,

  1. M.Sc Botany
  2. M.Sc Microbiology
  3. M.Sc Horticulture
  4. M.Sc Biotechnology
  5. MBA in Pharmaceutical Management
  6. M.Sc. Forestry

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

Advertisement