B.sc Chemistry Course Details in Tamil
நான் பிளஸ் +2 முடித்து விட்டேன். அடுத்து எனது மேற்படிப்பிற்காக நான் B.sc Chemistry படிக்கலாம் என்று மனதில் ஆசைப்பட்டுள்ளேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்கள் மற்றும் மற்ற உறவினர்களும் B.sc Chemistry மிகவும் கடினமான படிப்பு மேலும் அதனை படித்தவர்களுக்கு அவ்வளவாக வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால் நீ வேறு ஏதாவது மேற்படிப்பை தேர்வு செய்து படி என்கிறார்கள்.
அதனால் உங்களின் மனதில் B.sc Chemistry படிக்கலாமா..! வேண்டாமா..! என்ற கேள்வி உள்ளதா. அப்படி உங்களின் மனதில் உள்ள கேள்விக்கு பதில் கூறும் வகையில்தான் இன்றைய பதிவில் B.sc Chemistry படிப்பு பற்றிய முழுவிவரங்களையும் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> B.Com Course பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?
B.sc Chemistry Full Form in Tamil:
B.sc Chemistry என்பது இளங்கலை வேதியியல் என்றும், Bachelor of Science in Chemistry என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Chemistry என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும். மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
B.sc Chemistry Course படிக்க தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் வேதியியலை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்ச 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
- மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபாடுகின்றன.
B.sc Chemistry Course Details in Tamil:
நீங்கள் B.sc Chemistry படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்துதான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> B.Sc Maths படிக்க விரும்புபவரா நீங்கள் அப்போ இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
B.sc Chemistry Course Subject in Tamil:
இந்த B.sc Chemistry-ல் அனைத்து அடிப்படை வேதியியல் சாரா அம்சங்களையும் படிக்க வேண்டும்.
- Molecular System
- Material Reaction
- Structure
- Composition
- Properties
மேலே சொல்லப்பட்டுள்ள பாடங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் வேதியியல் பாடத்தை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு இந்த பாடங்கள் அனைத்தும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
B.sc Chemistry Course வேலைவாய்ப்புகள்:
B.sc Chemistry பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு கெமிக்கல் துறைகளிலும், மருத்துவ, உணவு தொழில்நுட்ப துறைகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
அது மட்டுமில்லாமல் மெடிக்கல் சர்வீஸ், மெடிக்கல் ரிசர்ச், உற்பத்தி மற்றும் மேம்படுத்துதல், உணவு தொழிற்சாலை, மருத்துவமனைகள், கெமிக்கல் இன்டஸ்ட்ரிஸ் போன்ற நிறுவனங்களிலும் லேப் டெக்னீசியன், பார்மஸிஸ்ட், பிளான்ட் பயோ கெமிஸ்ட், ரிசர்ச் அசோசியட் போன்ற பதவிகள் பெற முடியும்.
இதையும் பாருங்கள்—> பிசிஏ படிப்பு பற்றிய முழு விவரங்கள்
மேற்படிப்பு:
- MSc Molecular Chemistry
- Masters in Computational Chemistry
- MSc Environment & Green Chemistry
- MSc Biochemistry
- MSc Oil & Gas Chemistry
- MSc Physical & Materials Chemistry
- MSc Theoretical Chemistry
- MSc Organic Pharmaceutical Chemistry
- MSc Drug Chemistry
- MSc Medical Chemistry
- MSc Instrumental Analysis
- MSc Analytical Chemistry
- MSc Organic Chemistry
- MSc Inorganic Chemistry
- ME or MTech in Chemical Engineering
- MSc Applied Chemistry
- MSc in Chemistry
- MPhil Chemistry
- MSc Physical Chemistry
- MSc General Chemistry
போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |