Bsc Computer Science Vs Bca Which is Better
இன்றைய காலத்தில் உள்ள பிள்ளைகள் அனைவரும் அவர் அவருக்கான உரிமை மற்றும் விருப்பத்தை கேட்டு பெறுகிறார்கள். அதாவது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை என அனைத்தினையும் கேட்டு பெற்று கொள்கிறார்கள். அந்த வகையில் கல்வியினையும் உங்களுடைய உரிமைக்குள் அடங்கும். அதுமட்டும் இல்லாமல் கல்வி தான் ஒரு மனிதனுடைய இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஆட்களின் வேலை திறன் குறைந்து கணினியின் வேலை திறன் அதிகமாகிவிட்ட காரணத்தினால் பெரும்பாலான மாணவர்கள் கணினி தொடர்பான படிப்பினை படிக்க விரும்புகிறார்கள். ஆனாலும் கூட அதில் சிலருக்கு சிறிய சந்தேகங்கள் வருகிறது. அதாவது Bsc Computer Science-ஐ படிப்பதா இல்லை BCA படிப்பதா என்று குழப்பங்கள் எழுகிறது. அதனால் இன்று Bsc Computer Science Vs Bca இரண்டில் இந்த படிப்பு சிறந்தது. இதை படித்தால் என்ன வேலைக்கு செல்லலாம் போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
தேவையான தகுதி:
Bsc Computer Science அல்லது Bca இரண்டில் எதை படிக்க வேண்டும் என்றாலும் அதற்கு நீங்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதில் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்து இருக்க வேண்டும்.
Bsc Computer Science என்றால் என்ன.?
Bsc CS என்பதற்கு Bachelor of Science in Computer Science என்பதே முழு விரிவாக்கம் ஆகும். இத்தகைய படிப்பானது முற்றிலும் Programming Coding முறையினை அடிப்படையாக கொண்டதாகும். இது முற்றிலும் கருத்து சார்ந்த படிப்பு ஆகும்.
மேலும் இதில் 3 வருடத்திற்கான கல்லூரி படிப்பு ஆகும். இதில் மொத்தம் 6 செமஸ்டர் தேர்வுகள் காணப்படுகிறது.
Basics of Computer Science, Foundation course in Mathematics, Object-Oriented Programming using C++, Discrete Mathematics, Computer Organization, etc. ஆகிய பாடங்களை இதில் முக்கியமானதாக காணப்படுகிறது. மேலும் சில இதர பாடங்களும் இதில் இடம் பெற்றிக்குகிறது.
என்ன வேலைக்கு செல்வது:
- Research Scientist
- Software Engineer
- Mobile App developer
- Information Security Analyst
- Website developer
- Network Architect
- IT Project Manager
- UX/ UI designer
- Program Analyst
- Programmer
மேலே சொல்லப்பட்டுள்ள வேலைக்கு Bsc CS படிப்பினை படித்தால் நீங்கள் செல்லலாம். மேலும் சம்பளம் என்பது அனுபவம் மற்றும் உங்களின் திறமை, வேலையின் பிரிவு இவற்றை எல்லாம் பொறுத்து மாறுபடும்.
மேற்படிப்பு:
- Msc Computer Science
- Msc Data Science
- MBA
- Msc Data Analytics
ஆகிய படிப்புகளை படிக்கலாம்.
EEE Vs ECE இதில் எதை தேர்வு செய்தல் சிறந்தது.? EEE மற்றும் ECE படித்தால் என்ன வேலைக்கு செல்லலாம்.. |
BCA என்றால் என்ன.?
BCA என்பதன் விரிவாக்கம் Bachelor of Computer Application என்பதாகும். இத்தகைய படிப்பானது முற்றிலும் கணினி அறிவியலின் பயன்பாட்டினை பற்றியது ஆகும். மேலும் இதில் 3 வருட கல்லூரி படிப்பினையும், 6 செமஸ்டர் தேர்வுகளையும் கொண்டுள்ளது.
இதில் Data Structures, Operating Systems, Database Management, User Interface Design, etc ஆகிய பாடப்பிரிவுகள் ஆனது முக்கிய அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் சில இதர பாடங்களும் உள்ளது.
என்ன வேலைக்கு செல்வது:
- Programmer
- System Analyst
- Digital Marketer
- Technical Analyst
- Server Administrator
- Network Engineer
- Application Developer
- Software Architect
- Database Administrator
- Software Tester
BCA படிப்பினை படித்தால் மேலே கூறியுள்ள வேலைக்கு செல்லலாம். ஆனால் சம்பளம் என்பது ஒவ்வொரு துறை மற்றும் அனுபவத்தை பொறுத்து வேறுபடும்.
மேற்படிப்பு:
- MCA
- Master in Information Management
- Master in Computer Management
- MBA
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு படிப்புமே தற்போது உள்ள காலகட்டத்தில் நல்ல வரவேற்பு மற்றும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நீங்கள் கணினி அறிவியலில் நல்ல சிந்தனை மற்றும் அதிக ஆர்வம் கொண்டிருந்தால் Bsc CS படிப்பு சிறந்தது. அதே IT துறையில் தொழில் தொடங்க வேண்டும் அல்லது பணிபுரிய வேண்டும் என்றால் உங்களுக்கு BCA படிப்பு சிறந்தது.
மேலும் இரண்டு படிப்பிற்கான கல்வி கட்டணம் என்பது ஒவ்வொருவருடைய கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை பொறுத்து காணப்படும்.
அதிக சம்பளம் தரும் டாப் 15 படிப்புகள்.. மாணவர்களே சிந்திக்க வேண்டிய நேரம் இது தான்..
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |