Bsc Information Technology Course Details in Tamil
பொதுவாக படிப்பு என்பது நமது அறிவை வளர்த்து கொள்வதற்கு மட்டும் இல்லாமல் வருங்காலத்தில் நமது வாழ்க்கையை பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு ஆசானாகவும் இருக்கிறது. அதில் சிலருக்கு சிறு வயதில் இருந்து ஏதாவது ஒரு படிப்பின் மீது மட்டும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் அதனை படித்து வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். இதற்கு மாறாக சிலருக்கு 12- ஆம் வகுப்பு முடித்த பிறகு தான் அடுத்தகட்ட நிலையாக நாம் என்ன படிக்க வேண்டும். அப்படி நாம் படிக்கபோகும் படிப்பு நமது வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்குமா என்ற பலகுழப்பங்கள் இருக்கும். அப்படி ஒரு வேளை நீங்கள் Bsc Information Technology என்ற துறையினை தேர்வு செய்து படிக்க விரும்புனீர்கள் என்றால் இந்த பதிவை தொடர்ந்து படித்து உங்களுக்கு தேவையான தகவலை தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc chemistry படிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா..?
Information Technology Meaning in Tamil:
Information Technology (தகவல் தொழில்நுட்பம்) என்பது, தகவல்களை கணினி உதவியுடன் தேடுதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் ஆகியவற்றைச் செய்வதற்கான அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இது IT என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
Bsc IT Course in Tamil:
Bsc IT Course என்பது Bachelor of Information Technology என்று முழு விரிவாக்கத்துடன் அழைக்கப்படுகிறது.
இந்த படிப்பினை நீங்கள் படிப்பதற்கு தேர்வு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு 3 வருடம் கல்லூரி படிப்பு மற்றும் 6 Semester தேர்வுகள் நடைபெறும்.
ஆனால் இந்த Bsc IT Course அனைத்து கல்லூரிகளிலும் இருக்காது. அதனால் நீங்கள் Bsc IT Course உள்ள நல்ல கல்லூரி மற்றும் சிறந்த பல்கலைக்கழகம் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதனுடைய கட்டண தொகை என்பது ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு வேறுபாடும் விதமாக இருக்கும்.
Bsc IT Course படிக்க தேவையான தகுதி:
நீங்கள் Bsc IT Course- னை படிக்கச் விரும்புனீர்கள் என்றால் 12- ஆம் வகுப்பில் கணினி பிரிவினை ஒரு பாடமாக எடுத்து படித்து அதில் பொதுத்தேர்வில் 50% மதிப்பெண்களுடன் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதுபோல உங்களுக்கு கணினியை பற்றிய அடிப்படை தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அதனை பற்றி இன்னும் விரிவாக கற்றுக்கொள்ளும் திறனையும் நீங்கள் வளர்த்து கொள்ளும் நபராக இருத்தல் வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு Software துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் நீங்கள் இந்த Bsc IT Course-யை எடுத்து படிக்கலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு தகுதிகளும் உங்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும்.
B.sc Computer Science படிப்பு பற்றிய தகவல்..! |
Bsc IT Course Subjects in Tamil:
- C Programming
- Digital Principles and Applications
- Object Oriented Programming With Java
- Web Designing Language
- Mobile Application and Development
- Data Structures
- Mobile Computing
- Software Engineering
- PHP
- Internet Security
- Project Development
- ASP. Net
- Network Technology and Administration
- Networking and Internet Environment
மேலே சொல்லப்பட்டுள்ள தோராயமான பாடங்களை பற்றி நீங்கள் தனித்தனி பாடமாக விரிவாக படிக்க வேண்டியது இருக்கும்.
அதுபோல இதனை நீங்கள் ஒரு பாடமாக படித்தாலும் மற்ற Skil Knowledge என்று சொல்லப்படும் Program Coding, Spoken English மற்றும் Analytic போன்றவற்றை நீங்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
Bsc IT Course என்ன வேலை கிடைக்கும்:
விண்வெளி ஆய்வு துறை, கல்வித்துறை, Health Care, Pharmacy, Biotechnology போன்ற துறைகளில் Programmer, Software Developer, Graphic Designer, Quality Analyst மற்றும் IT Specialist போன்ற வேலைகள் உங்களுங்கு Bsc IT Course முடித்து இருந்தால் கிடைக்கும்.IT Skills:
நீங்கள் மூன்று வருடம் படிப்பை முடித்து விட்டு மேலும் IT நிறுவனங்கள் எதிர்பார்க்கும் இதர திறமைகளை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும் அப்போதான் உங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாக்கி விட்டது.
நீங்கள் Analytical, Problem Solving, Creativity, Web Development, Cybersecurity, Cloud Computing போன்ற திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.
சம்பள விவரங்கள்:
இந்தியாயவில் B.SC IT சம்பளம் அவருடைய திறன் மற்றும் அனுபவத்தின் கீழ் வழங்கபடுகிறது. அதாவது தொடக்க நிலையில் உள்ள ஒருவர் வருடத்திற்கு தோராயமாக 5.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறலாம்.
மேலும், அத்தொழிலில் அனுபவம் பெற்ற ஒருவர் வருடத்திற்கு தோராயமாக 4 முதல் 7 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.
Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்..! |
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |