B.sc Zoology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

B.sc Zoology Course Details in Tamil | B.sc Zoology Meaning in Tamil

நான் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டேன் பொதுத் தேர்வின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அடுத்து என்ன மேற்படிப்பு படிப்பது என்பதில் எனக்கு மிகப்பெரிய குழப்பம் உள்ளது. எனக்கு B.sc Zoology பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் எனது நண்பர்கள் மற்றும் பெற்றோர் B.sc Zoology படிக்க வேண்டாம் என்கிறார்கள். அதனை படித்தால் நல்ல வேலை வாய்ப்புகள்  கிடைக்காது என்கிறார்கள். அதனால் உங்களின் மனதில் B.sc Zoology படிக்கலாமா..! வேண்டாமா..! என்ற கேள்வியும் குழப்பமும் உள்ளதா..? அப்படி உங்களின் மனதில் உள்ள கேள்விக்கும் குழப்பத்திற்கும் பதில் கூறும் வகையில் தான் இன்றைய பதிவில் B.sc Zoology படிப்பு பற்றிய முழு விவரங்களையும் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.Sc Botany பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

B.Sc Zoology Course in Tamil: 

B.Sc Zoology Course in Tamil

B.sc Zoology என்பது இளங்கலை விலங்கியல் என்றும், Bachelor of Science in Zoology என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Zoology என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும். மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் B.sc Zoology படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

B.sc Zoology Course படிக்க தகுதி:

  • விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
  • மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபடுகின்றன.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.Com Course பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா

B.sc Zoology Course Subject in Tamil:

இந்த B.sc Zoology-ல் அனைத்து அடிப்படை விலங்கியல் சாரா அம்சங்களையும் படிக்க வேண்டியிருக்கும்.

  1. Protista to Pseudocoelomates,
  2. Principles of Ecology,
  3. Coelomates,
  4. Cell Biology,
  5. Diversity of Chordates,
  6. Controlling and Coordinating Systems,
  7. Fundamentals of Biochemistry,
  8. Comparative Anatomy of Vertebrates,
  9. Life-Sustaining Systems,
  10. Principles of Genetics,
  11. Molecular Biology,
  12. Evolutionary Biology,
  13. Developmental Biology.

மேலே கூறப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் பன்னிரெண்டாம் வகுப்பில் விலங்கியல் அல்லது உயிரியல் பாடத்தை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு இதனை படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

B.sc Zoology படித்தால் என்ன வேலை கிடைக்கும்:

B.sc Zoology படித்தவர்களுக்கு அறிவியல் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் அநேக வேலைவாய்ப்புகள் உண்டு.

மேலும் நுண்ணுயிரியலாளர், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ குறியீட்டு பயிற்சியாளர், டயாலிசிஸ் டெக்னீஷியன் மற்றும் Junior Research Fellow போன்ற பல வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc chemistry படிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா

மேற்படிப்பு: 

B.sc Zoology-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விரும்பினீர்கள் என்றால்,

  1. M.Sc Zoology
  2. M.Sc Medical Biotechnology
  3. M.Sc Medical Physiology
  4. M.Sc Biochemistry
  5. M.Sc Molecular biology
  6. M.Sc Health care sciences
  7. M.Sc. in Forensic science
  8. M.Sc. in Anaesthesia
  9. M.Sc. in Medical lab technology
  10. M.Sc Biotechnology
  11. M.Sc Microbiology
  12. M.Sc Bioinformatics
  13. M.Sc Medical Technology
  14. M.Sc Biomedical Technology/ MSc Biomedical Engineering

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

இதுபோன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> கல்வி
Advertisement