BVSC படிப்பினை படிப்பதற்கு முன்பாக நாம் என்ன தெரிஞ்சுக்கனும் தெரியுமா..?

Advertisement

BVSC Course Details 

நாம் அனைவருக்கும் சிறு வயதில் இருக்கும் ஒரு படிப்பின் மீது ஆர்வம் அல்லது கனவு இருக்கும். அதுமட்டும் இல்லாமல் படித்தால் அந்த படிப்பினை தான் படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடனும் சில நபர்கள் இருப்பார்கள். ஆனால் இவ்வாறு நினைப்பதில் நூற்றில் 50% நபர்கள் விருப்பத்திற்கு மாறான ஒரு படிப்பினை படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் நிறைய நபருக்கு டாக்டர் படிப்பிற்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இவ்வாறு நாம் ஆசையினை வளர்த்து கொள்வது போல அந்த படிப்பிற்கான தகுதி என்ன வேண்டும் மற்றும் அது எத்தனை வருட படிப்பு என இவற்றை எல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்று BVSC படிப்பின் தகவலை பார்க்காமல் வாங்க..!

Bsc Agriculture படிப்பு பற்றிய தகவல்கள்.. 

BVSC படிப்பிற்கான தகுதி:

 bvsc full form in tamil

ஒரு நபர் கால்நடை மருத்துவருக்கான படிப்பினை படிக்க வேண்டும் என்றால் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்.

மேலும் பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் 50%-ற்கு மேலாக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இத்தகைய தகுதி வாய்ந்த ஒரு நபர் கால்நடை மருத்துவருக்கான நுழைவு தேர்வினை அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BVSC பற்றிய தகவல்:

  • இந்த படிப்பிற்கான வருடம் என்பது 5 வருடம் 6 மாதம் ஆகும். மேலும் இந்த படிப்பினை எல்லா கல்லூரிகளும் படிக்க முடியாது. அதனால் இந்த படிப்பிற்கான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதுமட்டும் இல்லாமல் உங்களுக்கான மொத்த செமஸ்டர் தேர்வு 10 நடைபெறும்.

என்ட்ரன்ஸ் எக்ஸாம்:

  • ICAR AIEEA
  • KEAM
  • WBJEE
  • KAU Entrance Exam
  • RPVT
  • AIPVT
  • KEAM

மேலே சொல்லப்பட்டுள்ள என்ட்ரன்ஸ் எக்ஸாமில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கும் முறையினை பொறுத்து தான் உங்களுக்கான கல்லூரி சேர்க்கை என்பது நடைபெறுகிறது.

மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் கல்வி கட்டணம் என்பது அமையும்.

BVSC என்றால் என்ன..?

BVSC என்பதற்கு Bachelor of Veterinary Science என்பது முழு விரிவாக்கம் ஆகும். இந்த படிப்பு முற்றிலும் கால்நடைகளுக்கான மருத்துவ படிப்பு ஆகும். இந்த படிப்பினை படித்த பிறகு கால்நடை மருத்துவர்கள் வீட்டு செல்ல பிராணிகள் முதல் காடுகளில் வாழும் விலங்குகள் என அனைத்திற்கும் மருத்துவம் பார்ப்பார்கள்.

பணி என்ன.?

  • கால்நடைகளுக்கு ஏற்படும் உடல்நிலை குறைபாடு
  • கால்நடைகளுக்கான அறுவை சிகிச்சை

மேலே சொல்லப்பட்டுள்ளது முக்கியமானதாக இருந்தாலும் இதனை தவிர இதர அனைத்தினையும் செய்கிறார்கள்.

விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா 

BVSC படிப்பிற்கு என்ன வேலை கிடைக்கும்:

கால்நடை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், கால்நடை ஆலோசகர், கால்நடை பேராசிரியர், ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி கூட்டாளர், கால்நடை மருத்துவமனைகள், கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள் மற்றும் அரசு மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனைகள் என பல வேலைகளுக்கு செல்லலாம்.

மேற்படிப்பு என்ன படிக்கலாம்:

  • MVSc Veterinary Microbiology
  • MVSc Livestock Products Technology
  • MVSc Animal Genetics And Breeding
  • MVSc Veterinary Parasitology
  • MVSc Veterinary Biochemistry
  • MVSc Pharmacology And Toxicology
  • MVSc Veterinary Surgery And Radiology
  • MVSc Veterinary And Animal Husbandry Extension
  • MVSc Animal Nutrition

Bsc Information Technology படிப்பு பற்றிய தகவல்கள்

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement