Chartered Accountant Course Details | CA Course Meaning in Tamil
படிப்பு என்று நாம் ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம். ஆனால் அதில் நிறைய வகையான பாடப்பிரிவுகள் உள்ளது. அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தின் மீது ஆர்வம் இருக்கும். அதிலும் சிலர் பார்த்தால் கணக்கு பாடத்தில் புலி என்றும் கூறும் அளவிற்கு கணக்கு போடும் திறன் கொண்டவராக இருப்பார்கள். ஆனால் நாம் சிறிய வயதில் எப்படி படிக்கின்றோம் என்பதை விட 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் எப்படி படிக்கின்றோம் என்பது தான் முக்கியமான ஒன்று. ஏனென்றால் இந்த மூன்று வகுப்பிலும் கவனமாக படித்தால் மட்டுமே அதற்கு ஏற்றவாறு நம்முடைய கல்லூரி படிப்பானது அமையும். இவற்றை எல்லாம் சரியாக முடித்து வந்தாலும் கூட கல்லூரியில் என்ன பிரிவு எடுத்து படிப்பது மற்றும் அந்த பிரிவில் என்னென்ன பாடங்கள் எல்லாம் இருக்கும் என்ற குழப்பம் இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் Chartered Accountanct Course பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ Bsc Information Technology படிப்பு பற்றிய தகவல்கள்..!
CA Course in Tamil | Chartered Accountant Course Details in Tamil:
- CA Course என்பது Chartered Accountancy என்று முழு விரிவாக்கத்துடன் அழைக்கப்படுகிறது.
- இத்தகைய பிரிவினை படிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 4 1/2 வருடம் முதல் 5 வருடம் வரை கல்லூரி படிப்பு இருக்கும். மேலும் உங்களுக்கு தோராயமாக மொத்தம் 8 செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.
- அதுபோல இந்த படிப்பினை அனைத்து கல்லூரிகளிலும் படிக்க இயலாது. ஆகையால் முதலில் CA பிரிவு இருக்கும் கல்லூரியை தேர்வு செய்து அங்கு படிக்க வேண்டும்.
- நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு உங்களுடைய கல்லூரி கட்டணம் என்பது அமையும்.
Bsc Agriculture படிப்பு பற்றிய தகவல்கள்.. |
CA Course என்ன தகுதி வேண்டும்..?
- CA படிப்பினை நீங்கள் படிக்க வேண்டும் என்றால் அதற்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 50% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அதுமட்டும் இல்லாமல் 12-ஆம் வகுப்பில் கணினி அறிவியல், வணிகவியல் இதுபோன்ற கணக்கு பாடங்களை படித்து இருக்க வேண்டும். மேலும் கணக்கு பாடத்தின் மேல் அதிக ஆர்வம் உள்ளவர்கள் இந்த பிரிவினை எடுத்து படிக்கலாம்.
- இதில் முக்கியமாக நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே CA படிப்பினை படிக்க முடியும்.
CA Course என்ன வேலை கிடைக்கும்:
- Tax Manager
- Accountant
- Finance Manager
- Accounting Manager
- Audit Specialist
- Tax Specialist
மேலே சொல்லப்பட்டுள்ள வேலைகள் அனைத்திற்கும் 1 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை தோராயமான வருமானத்தை பெறலாம்.
நீங்கள் படிக்கும் கல்லூரியினை பொறுத்து பாடங்கள் அமையும் என்று கூறபப்டுகிறது.
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |