View Center City for Ctet 2024
Ctet Jan 2024 Exam Date: CTET 2024 ஜனவரி தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 03, 2023 அன்று பள்ளி ஆசிரியர்கள் பணிக்க வெளியிடப்பட்டது. (Ctet Last Date to Apply 2024) ஆன்லைன் பதிவு தொடங்குவதற்கான தேதிகள், CTET விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் CTET விண்ணப்பப் படிவம் 2024க்கான பிற முக்கியமான தேதிகள் விரிவான அறிவிப்புடன் அறிவிக்கப்பட்டுள்ளன. ctet (Exam Twice in a Year) ஒவ்வொரு ஆண்டும், CBSE ஆண்டுக்கு இரண்டு முறை CTET தேர்வை நடத்துகிறது, இது பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்புகளை ஏற்படுத்துகிறது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) தேசிய அளவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களின் தகுதியைத் தீர்மானிக்க நடத்தப்படுகிறது. (Ctet Exam Centre Check)இந்த தேர்விற்கு அப்ளை செய்திருக்கும் விண்ணப்பிப்பதாரர்கள் எக்ஸாம் சென்டர் தகவல் பற்றி அறிந்து கொள்வோம்.
Ctet City Intimation Slip 2024:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) CTET சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்பை வெளியிட்டது. இந்தச் சீட்டில் 21 ஜனவரி 2024 அன்று நடைபெறும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு-2024- க்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நகரத்தின் விவரங்கள் உள்ளன. தேர்வர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு இந்தத் தேர்வு அறிவிப்புச் சீட்டு உதவியாக இருக்கும். இது அட்மிட் கார்டு அல்ல என்பதை விண்ணப்பதாரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன் அனுமதி அட்டை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ctet Exam City Center 2024 Tamilnadu:
தமிழ்நாட்டில் எக்ஸாம் சென்டர் ஆக சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மாஊரை, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் போன்ற மாவட்டங்கள் உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர கால அட்டவணை 2024
Ctet Pre Admit Card 2024:
தேர்வு நடத்துபவர் | மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) |
தேர்வு பெயர் | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET 2024) |
CTET தேர்வு தேதி 2024 | ஜனவரி 2024 |
CTET ப்ரீ அட்மிட் கார்டு தேதி 2024 | ஜனவரி 2024 |
CTET அனுமதி அட்டை தேதி | ஜனவரி 2024 |
CTET முடிவு 2024 | பிப்ரவரி 2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | ctet.nic.in |
Ctet Admit Card Date 2024:
CTET 2024 தேர்வு ஜனவரி 21 அன்று நடத்தப்படும் மற்றும் அட்மிட் கார்டு ஜனவரி 18 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
How to Check Ctet Exam Centre:
⇒ முதலில் அதிகாரபூர்வ இணையதளமான ctet.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
⇒ பின் அதில் View Centre City for CTET Jan-2024 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
⇒ அதில் நீங்கள் விண்ணப்ப எண், மற்றும் பிறந்த தேதியை கொடுக்க வேண்டும்.
⇒ அதில் கேப்சா இருக்கும் அதனை பதிவிட வேண்டும், பிறகு Sumbit என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அட்மிட் கார்டானது திரையில் தோன்றும், அதனை Download செய்து கொள்ள வேண்டும்.
⇒ எக்ஸாம் சென்டர் பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.👉👉 Exam center
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |