D.COOP COURSE விவரம்
D.COOP என்பது ஒரு வகையான பட்டப் படிப்பாகும். இதை 12ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் இதற்கு படிக்கலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்க எளிமையாக இருக்கும். மேலும் இது ஒரு வருடகால படிப்பை கொண்டுள்ளது இந்த படிப்பை படிப்பதற்கு ஏதேனும் ஒரு இன்ஸ்டூட் சேர்ந்து படிக்கலாம். D.COOP என்பது வளர்ச்சி கூட்டுறவு மேலாண்மை இதன் அர்த்தமாகும். இதை படித்து முடித்தவர்கள் அரசு கூட்டுறவு வங்கிகளில் வேலைபார்க்க வாய்ப்புகள் உள்ளன. இந்த வகையான படிப்பு தமிழகத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு உதவுகிறது. இந்த படிப்பை பற்றி அதிகம் யாருக்கும் தெரிவதில்லை. எனவே பயனர்கள் இதனை படித்து பயனடையுமாறு வேண்டுகிறேன்.
மேலும்,இந்த படிப்பை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஏதாவது ஒரு இன்ஸ்டூட் சேர்ந்து அவர்களின் அறிவுரையின்படி இவ்வகையான படிப்பை ஆன்லைன் மூலம் படிக்கலாம். இதற்கான செலவுகள் ஆஃப்லைன் விட கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.
D.COOP Qualification :
- D.COOP (DIPLOMA COOPERATIVE MANAGEMENT) என்பது ஒரு கூட்டுறவு நிறுவனங்களின் பட்டப் படிப்பாகும். கூட்டுறவு வங்கிகளில் வேலைபார்க்க விரும்புபவர்கள் இந்த படிப்பை படிக்கலாம். இது ஒரு வருடகால பட்ட படிப்பாகும். இதில் குறைந்தபட்ச கல்வித் தகுதி 12th (45% முதல் 50%) வரை தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
- DCOOP படிக்க பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்கலாம் மற்றும் இதற்கு வருகைப்பதிவு மிகவும் கட்டாயமாக உள்ளது.
- இதில் மொத்தம் 2 விதமான தேர்வுகள் நடைபெறும் இந்த இரண்டு தேர்விற்கும் 80% வருகைப்பதிவு அவசியமாக இருக்கும்.
- இது வணிகம் மற்றும் பெருநிறுவன மேலாண்மை துறையின் அதிக வாய்ப்புகளை கொண்ட ஒரு துறையாகும் இதில் மொத்தம் இரண்டு செமஸ்டர் உள்ளன.
- இதில் அரசு துறையின் கீழ் செயல்படுவதால் இதில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
D.COOP வேலைவாய்ப்பு :

- மேலாண்மை உதவியாளர்
- திட்ட மேலாளர்
- பிரிவு மேலாளர்
- ஆராய்ச்சி மேலாளர்
- அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
D.COOP பாடத்திட்டம் :
- கூட்டுறவு கொள்கைகள்
- மேலாண்மை நுட்பங்கள்
- நிதி மேலாண்மை கூட்டுறவு
- கூட்டுறவு சட்டம்
- கூட்டுறவு கணக்கியல்
- கூட்டுறவு வங்கியியல்
| இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |














