Engineering Student Skills in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அது என்ன தகவல் என்று அப்புறம் பார்ப்போம். அதற்கு முன் படிப்பு என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு படிப்பு தான் உதவியாக இருக்கும். பணத்தால் உயர்ந்தவர்களை விட படிப்பால் உயர்ந்தவர்கள் இந்த உலகில் அதிகமாகவே இருக்கிறார்கள்.
மனிதர்கள் பணத்தில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்களோ இல்லையோ, கல்வியில் என்றும் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதுபோல அனைவருக்குமே படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதோ இல்லையோ ஆர்வம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் படிப்பில் சிறந்து விளங்கமுடியும். சரி நம் அனைவருக்குமே ஒவ்வொரு படிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, உங்களுக்கு இன்ஜினியரிங் படிக்க ஆசையா..? அப்போ வாங்க இன்ஜினியரிங் படிக்க என்ன திறமை இருக்க வேண்டும் என்று பார்ப்போம்..!
10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்துட்டா.. அப்போ அடுத்து என்ன படிக்க போறீங்க |
இன்ஜினியரிங் படிக்க என்ன திறமைகள் அவசியம்..!
பொதுவாக இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். அதனால் இன்ஜினியரிங் படிக்க என்ன திறமைகள் இருக்க வேண்டும் என்று இங்கு காண்போம். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த 2 திறமைகள் ரொம்ப அவசியம்.
Aptitude Training (திறனறிதல்):
திறனறிதல் என்ற பிரிவில் Aptitude, Logical Reasoning மற்றும் Critical Thinking ஆகியவற்றை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். இன்றைய நிலையில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் 2 ஆம் ஆண்டில் Project Internship செய்து வருகிறார்கள்.
ஆகவே இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் Aptitude திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும். அதுபோல நாம் எந்த நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றாலும் First Round Selection ஆக Aptitude தான் உள்ளது. அதுபோல Civil Services தேர்விலும் Aptitude உள்ளது.
பாராமெடிக்கல் படிப்புகளின் பட்டியல் |
Basic Coding (அடிப்படை நிரலாக்க மொழி):
நிரலாக்க மொழியில் C, C++, Java, Python போன்றவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் Coding திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம். அதுபோல மென்பொருள் துறையில் வேலைக்கு செல்ல நினைப்பவர்கள் C, C++, Java, Python ஆகிய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும்.
அதிக சம்பளத்தில் நல்ல நிறுவனத்தில் வேலைக்கு செல்ல நினைப்பவர்களுக்கு இந்த திறமைகள் ரொம்ப அவசியம்.
அதிக சம்பளம் தரும் டாப் 15 படிப்புகள்.. மாணவர்களே சிந்திக்க வேண்டிய நேரம் இது தான்.. |
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |