முறையான கடிதம்
Formal Letter Format in Tamil:- கடிதங்கள் இருவகைப் படும். அவை உறவாடற் கடிதங்கள் மற்றும் தொழில் முறைக் கடிதங்கள் ஆகும். அவற்றில் தொழில் முறைக் கடிதத்தை அலுவலக கடிதம் என்று சொல்வார்கள். அதாவது அலுவலக கடிதம் என்பது ஒரு நிறுவனம், வணிகம், தொழிலாளர், அரசியல், நிதி, கல்வித் தலைப்பு போன்றவற்றைக் குறிக்கும் ஒரு ஆவணமாகும், இதில் முறையான மற்றும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். முறையான கடிதம் என்பது ஒரு கடிதம், நீங்கள் ஒரு கோரிக்கை, பரிந்துரை, விளக்கக்காட்சி, நன்றி, உரிமைகோரல், ராஜினாமா அல்லது குறிப்பிட்ட தகவல்களை வெளியிட விரும்பும் சந்தர்ப்பங்களில் வழக்கமாக இருக்கும். ஓரளவு முறையான கடிதம் என்றால் என்ன? என்பதற்கு இப்பொழுது உங்களுக்கு விளக்கம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சரி வாங்க இந்த பதிவில் ஒரு முறையான கடிதம் எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
அலுவலக கடிதம் – Formal Letter Format in Tamil
உதாரணத்திற்கு உங்கள் பகுதியில் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு, பொதுமக்கள் நடைப்பயிற்சி பழகுவதற்கு ஏற்ற பூங்கா ஒன்று அமைத்துத்தருமாறு மாநகராட்சித் தலைவருக்கு அலுவலக கடிதம் ஒன்றை எப்படி எழுதலாம் என்று கீழ் காண்போம்.
அலுவலக கடிதம் எழுதும் முறை
ஊர்: XXX
மாவட்டம்: YYY
நாள்: 00/00/00
அனுப்புநர்:
தங்கள் பெயர்,
தங்கள் முகவரி.
பெறுநர்:
மாநகராட்சித் தலைவர் அலுவலர்,
மாநகராட்சி அலுவலகம்,
அதன் ஊர்.
பொருள்: பூங்கா வசதி அமைத்துத்தர வேண்டி.
மதிப்புற்குரிய ஐயா,
வணக்கம்.. நான் (XXX உங்கள் ஊர்) வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் நிறைய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசித்து வருகின்றன. எனவே குழந்தைகள் விளையாடுவதற்கும், பொதுமக்கள் ஓய்வு எடுப்பதற்கும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் ஒரு பூங்கா அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
XXX
(உரைமேல் உள்ள முகவரி)
பெறுநர்:
மாநகராட்சித் தலைவர் அலுவலர்,
மாநகராட்சி அலுவலகம்,
அதன் ஊர்.
தொடர்புடைய கடிதங்கள் |
காவல்துறை புகார் மனு எழுதுவது எப்படி? |
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி |
நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |