Government Arts and Science College Apply Online
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை 08.05.2023 முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. ஆக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அது குறித்த தகவல்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 8-ஆம் தேதி வெளியான நிலையில், மாணவர்கள் அடுத்ததாக என்ன படிக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளைப் போலவே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
Government Arts and Science College Apply Online:
அந்த வகையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பொறியியல் படிப்புகளில் 1,07,395 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 8 முதல் தொடங்கிறது. மாணவர்கள் http://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலமாக, வருகின்ற மே 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கான விண்ணப்ப கட்டணம் கடந்த ஆண்டு ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.50, எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.2 நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும் நடப்பாண்டில் இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் ரூ.48, பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்ஜினியரிங் படிப்பிற்கான வகைகள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்..!
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ Credit Card/ Net Banking மூலம் இணையதள வழியாக செலுத்தலாம்.
இணையதளம் மூலமாக கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் இன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
முக்கிய தேதிகள்:
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடங்கும் நாள் | 08.05.2023 |
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் | 19.05.2023 |
விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் நாள் | 23.05.2023 |
மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நாள் | மே 25 முதல் 29-ம் தேதி வரை |
முதற்கட்ட பொது கலந்தாய்வு நடைபெறும் நாள் | மே 30 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை |
2-ஆம்கட்ட பொது கலந்தாய்வு நடைபெறும் நாள் | ஜூன் 12 முதல் 20-ஆம் தேதி வரை |
முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் நாள் | ஜூன் 22-ம் தேதி |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொறியியல் கல்லூரியில் எந்த படிப்புகளை படித்தால் வேலை வாய்ப்பு..?
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |