ஜவஹர்லால் நேரு பற்றிய கவிதைகள்
இன்றைய பதிவில் ஜவஹர்லால் நேரு பற்றிய கவிதைகள் பற்றி பார்க்க போகிறோம். இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் அரும்பாடு பட்டவர்களுள் ஜவஹர்லால் நேருவும் ஒருவராவார். இந்திய நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமை இவரையே சேரும். குழந்தைகளுக்கு நேரு என்றால் மிகவும் பிடிக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற பண்டிகை மட்டும் கொண்டாடப்படுவது அல்ல. இதற்கு மாறாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என இவர்களையும் பெருமிதம் கொள்ளும் விதமாகவும், சிறப்பிக்கும் விதமாகவும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளை தான் குழந்தைகள் தின விழாவாக வருடந்தோறும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
மேலும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவஹர்லால் நேரு.குழந்தைகள் அனைவரும் இவரை மாமா என்று சொல்லி அழைக்கும் அளவில் பேரன்பு கொண்ட ஒருவராக இவர் திகழ்ந்தார். குழந்தைகளின் மீது உள்ள இத்தகைய பாசத்தினை நல்ல விதமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு உணவு வழங்கும் திட்டம், கல்வி திட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கும் திட்டம் என இவற்றை எல்லாம் நடைமுறை படுத்தினார். அதோடு மட்டும் இல்லாமல் நேருவின் பிறந்த நாளினையே அனைவரும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறது. எனவே இன்றைய பதிவில் ஜவஹர்லால் நேரு பற்றிய கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாங்க…..
Jawaharlal Nehru poetry In Tamil :

வெண்புறா! வெண்புறா!
நேரு மாமா வெண்புறா!
வெள்ளக் குள்ளாய் வெள்ள சொக்காய்
போட்டிருப்பார் என்றுமே !
நமது மண்ணைக் காப்பாற்ற
வீறுகொண்டே எழுந்திட்டார்!
காந்தி தாத்தா கூட நின்று
வாங்கி தந்தார் சுதந்திரம்!
குழந்தைகளை பார்த்துவிட்டால்
இனிக்க இனிக்க பேசுவார்!
உலக மக்கள் அனைவருக்கும்
பிடித்த நல்ல தலைவராம்!
சொத்து சுகம் வைத்திருந்தும்
தேசம் காக்க வந்திட்டார் !
தனது சொத்தை தேசத்திற்கே
வாரித் தானே தந்திட்டார்!
குழந்தைகளே ! குழந்தைகளே!
நேருவின் புகழ் பாடுங்கள்!
அவரது இனிய பிறந்த நாளை!
அழகாய் கொண்டாடுங்கள் !
ஜவஹர்லால் நேரு பற்றிய பத்து வரிகள்
ஜவஹர்லால் நேரு கவிதை :
மலர்களை நேசிக்கும்
மனதைக்
கொண்டவரே!
மழலையே நேசித்து
நேரு மாமா என்றும்
குழந்தைகள் மனதை
கவர்ந்தவரே
முதல் பிரதமராய்
அரசவையை அலங்கரித்தாய்
தன் தலைமுறையை நாட்டுக்காக
உழைக்க அர்ப்பணித்தாய்
ஆங்கிலேய நாகரீகத்தில்
வளந்தாலும்,
இந்திய மக்களுக்காக
உழைத்தாயே..!
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |














