வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கல்வி அதிகாரம் 40 திருக்குறள் | Kalvi Adhikaram 40 Thirukural In Tamil 

Updated On: December 8, 2025 12:42 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Kalvi Adhikaram 40 Thirukural In Tamil 

இன்றைய பதிவில் கல்வி அதிகாரம் 40 திருக்குறள் பற்றி பார்க்க போகிறோம்.  உலக புகழ்ப்பெற்ற திருக்குறள் நூலின் சிறப்பையும், 133 அதிகாரங்களாகபிரிக்கப்பட்டுள்ள 1330 குறள்களின் விளக்கத்தையும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை பல பெயர்களால் அழைத்து வருகின்றனர். திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் போன்ற பல சிறப்பு பெயர்கள் உண்டு. திருக்குறளில் உள்ள 1330 குறள்களும் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவினால் அமைந்துள்ளது. அந்த வகையில்  கல்வி அதிகாரம் 40 திருக்குறள்  பற்றி பார்க்கலாம் வாங்க…

 கல்வி அதிகாரம் 40 திருக்குறள் :

குறள் :

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத்  தக

பொருள் :

பிழைகள் இல்லாதவற்றைத் தனது குறைகள் நீக்குமளவுக்குக்  கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்க வேண்டும். 

குறள் :

எண்ணென்ப ஏனை  யெழுத்தென்ப இவ்விரண்டுங் 

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

பொருள்:

எண்ணும் எழுதும் எனப்படும் அறிவு கண்களை பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

குறள் :

கண்ணுடைய  ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு 

புண்ணுடையர் கல்லா தவர் 

பொருள்:

கண்ணிலாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்கு கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

குறள் :

உவப்பப் தலைக்கூடி உள்ளப் பிரிதல் 

அனைத்தே புலவர் தொழில் 

பொருள்:

மகிழ்ச்சி பொங்கிட சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனம் கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

குறள் :

உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் 

கடையரே கல்லா தவர்.

பொருள்:

அறிவுடையார் முன் அறிவில்லத்தவர் போல் தாழ்ந்து நின்று, மேலும், கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தை கற்றுக்  கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்.

திருக்குறள் அதிகாரங்கள் விளக்கம்.! | Ahirukkural Adhikaram in Tamil

குறள் :

தொட்டனை தூறு மணற்கேணி  மாந்தர்க்குக் 

கற்றனை தூறும் அறிவு

பொருள்:

தோன்ற தோன்ற ஊற்றுநீர் கிடைப்பது போலத்  தொடர்ந்து படிக்க படிக்க அறிவு பெருகி கொண்டே இருக்கும்.

குறள் :

யாதானும் டாடாமால்   ஊராமல் என்னொருவன் 

சாந்துணையுங் கல்லாத வாறு 

பொருள்:

கற்றோருக்கு எல்லா இடங்களிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ.

குறள் :

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் 

கெழுமையும் ஏமாப் புடைத்து 

பொருள்:

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

குறள் :

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு 

காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்:

தமக்கு இன்பம் தருகின்ற  கல்வியறிவு உலகத்தாருக்கு இன்பம் தருவதை கண்டு,அறிஞர்கள்  மேலும் மேலும் பலவற்றை கற்றிட விரும்புவார்கள்.

குறள் :

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு 

மாடல்ல மற்றை யவை 

பொருள்:

கல்வி ஒன்றே அறிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான செல்வம் வேறு எதுவும் இல்லை.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now