Kalvi Patriya Ponmozhikal
இன்றைய பதிவில் கல்வி பற்றிய பொன்மொழிகள் பற்றி பார்க்க போகிறோம். கல்வி என்பது ஒரு மனிதனை உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்று பிற” என்கிறார் பொய்யாமொழி புலவர். உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். கல்வியின் சிறப்பை தெளிவாக எடுத்து காட்டுகின்றது.
மேலும், மன்னனும் மாசறக் கற்றோன் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையவன் மன்னற்குத் தன்தேசம் அல்லாற் சிறப்பு இல்லை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. என்றார் ஔவையார் கல்வியை பற்றி சிறப்பாக கூறியுள்ளார். கல்வி என்பது உடல், அறிவு மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்கான ஒரு அமைப்பு ஆகும். இது உலக அறிவை வளர்க்கவும். திறமையை அளிக்கவும், சமூகத்தில் பங்களிப்பு செய்யவும் உதவுகிறது. கல்வி அறிவு பண்பாடு மற்றும் நற்பண்புகளையும் அளித்து முழுமையான மனிதனை உருவாக்குகிறது.அந்த வகையில் இன்றைய பதிவில் கல்வி பற்றிய பொன்மொழிகள் பற்றி பார்க்கலாம் வாங்க…
கல்வி பற்றிய பொன்மொழிகள்:
- யாரிடம் கற்றோமோ அவரே ஆசிரியர், போதிப்பவர்கள் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிட மாட்டார்கள்.
- கற்பது கடினம், ஆனால் அதைவிட மறப்பது கற்பதை மறப்பது.
- மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது.
- பிறவி திறமையை வளர்பதற்காகவே கல்வியறிவு பயன்பட வேண்டும்.
- இளமை காலத்தில் கல்வியை புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இறந்தவன்.
- பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.
- எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி
- சான்றோன் ஆக்காது கல்வி சமர்த்தியமாய் கழித்த சோம்பலேயாகும்
- கல்விக்கூடம் ஒரு தோட்டம், மாணவர்கள் செடிகள், ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.
- கல்வி அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது.
- கல்வியின் வேர்கள் கசப்பானதாகத்தான் இருக்கும்.ஆனால் அது தரும் பழம் இனிப்பு நிறைந்தவை.
- கல்வி என்பது தகவலை சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.
- மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி
- அறிவை மேலும், மேலும் கூர்மையாக்கிகொள்ளப் பயன்படும் கருவி
- பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது.
- கற்றறிந்த மனிதன் என்று யாரும் இல்லை,கற்கும் மனிதர்கள் தான் உள்ளனர்.
- குறைவான கற்றல் ஒரு ஆபத்தான விஷயம்
- எப்படி கற்றுக்கொள்வது என்பது வாழ்க்கையின் முக்கியமான திறமை
- கல்வி என்பது இருளில் இருந்து வெளிச்சத்திற்கு செல்வதாகும்
- கல்வியின் நோக்கம் வெற்று மனதை திருந்த மனதாக மாற்றுவது ஆகும்.
நட்சத்திரம் சொல்லும் பழமொழிகள்
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














