கடைசி நேரத்தில் எப்படி தேர்வுக்கு தயாராவது | Last Minute Exam Tips in Tamil

Advertisement

தேர்வுக்கு தயாராவது எப்படி | Last Minute Study Tips in Tamil

வணக்கம் சகோதர சகோதிரிகளே தேர்வுக்கு தயாராகுகிறார்கள் அப்படி என்றால்  உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பொதுவாக நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு கடைசி நேரத்தில் மறந்துவிடுவார்கள். காரணம் அவர்களுக்கு தேர்வுகள் மீது உள்ள பயத்தில் மறந்துவிடுவார்கள். ஆனால் எதற்கும் கவலை படமால் சிலர் இருப்பார்கள் அவர்களுக்கு கடைசி நேரத்தில் புத்தகத்தை நிறைய பக்கங்களை புரட்டி படிப்பார்கள் சிலர் அதனை வைத்து எழுதுவார்கள் சிலர் பாடம் நடத்துவதை வைத்து  எழுதுவார்கள். இது போல் உள்ள மாணவர்களுக்கு இந்த பதிவை படித்து அதனை பின்பற்றி தேர்வுக்கு தயாராகுங்கள்.

எதனால் குழந்தைகளுக்கு கல்வியில் கவனம் குறையுதுனு தெரியுமா?

Exam Tips in Tamil:

டிப்ஸ்: -1

Exam Tips in Tamil

  • தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எப்போதும் பதட்டத்தில் இருக்கக்கூடாது அதுவே அவர்கள் படித்தவற்றை மறக்க செய்யும். அதனால் தேர்வுக்கு தயங்குபவர்கள் பதட்டத்தை தவிர்க்கவும்.

டிப்ஸ்: -2

Last Minute Study Tips in Tamil

  • கேள்வி தாளில் ஒரு கேள்விக்கே பல விதமான பதில்கள் இருக்கும். அதனால்  ஒரு கேள்வி பதில் படித்தால் முதலில் கேள்விகளை படித்து புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.

டிப்ஸ்: -3

Exam Tips in Tamil

  • படிக்கும் போது பாட புத்தகத்தில் உள்ளதை போல் எழுத வேண்டும் என்பதை தவிர்க்கவும். படிப்பதை புரிந்து அதனை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை வைத்து உங்களின் பதில்களை எழுதுவது மிகவும் சுலபம்.

டிப்ஸ்: -4

 Last Minute Exam Tips in Tamil

  • தேர்வுகள் நெறுக்கிவிட்டால் எதனை படிக்க வேண்டும் என்பதில் பல குழப்பங்கள் வரும். அதனால் தான் கால அட்டவணை வைத்துக்கொண்டு அதனை பின்பற்றி படிக்க வேண்டும். உங்களுக்கு எந்த பாடம் கடினமாக இருக்கிறதோ அதற்கு அதிகம் நேரம் செலவிட வேண்டாம். ஏனென்றால் அதனை மட்டும் அதிகம் நேரம் படித்து மற்ற பாடங்களில் படித்தவற்றை மறந்துவிடுவீர்கள். அதனால் தனி தனியாக நேரம் ஒதுக்கி படித்தால் போதும் கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெறலாம்.

டிப்ஸ்: -5

Exam Tips in Tamil

  • தேர்வுக்கு கடைசியாக தயாராகும் மாணவர்கள் எதனை படிப்பது என்று குழப்பத்தில் இருப்பார்கள். கடைசி 2 நாட்களில் படிப்பார்கள் அப்போது என்ன படிப்பது என்று தெரியாமல் எல்லாவற்றையும் படிக்க முடியாமல் போய்விடும். அதனால் புத்தகத்தில் உள்ள முக்கியமான கேள்வி பதில்களை படித்தால் மதிப்பெண் பெறலாம்.

டிப்ஸ்: -6

  • பத்தாம் வகுப்பு பாடத்தில் மிகவும் கடினமாக இருப்பது கணிதம் அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடினமாக இருப்பது துறை சம்மந்தப்பட்ட பாடம் கடினமாக இருக்கும். கணிதம் பாடத்தை படிப்பதை விட கணக்கை போட்டு பார்க்கவும். அப்போது தான் உங்களுக்கு எந்த இடத்தில் கேள்விகள் வரும் என்பது தெரியும்.
இன்றைய கல்வி முறை கட்டுரை

டிப்ஸ்: -7

  • தேர்வுக்கு கண் படித்தால் படிப்பு வாராது தூக்கம் தான் வரும். மனிதனுக்கு  உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல் தூக்கம் முக்கியம். நன்றாக தூங்கினால் மட்டுமே அவர்களின் கவனம் முழுவதும் படிப்பில் இருக்கும் இல்லை என்றால் அவர்களுக்கு தேர்வறையில் தூக்கம் வரும் அதனால் தேர்வு  எழுதுவது என்பது மிகவும் கடினம்.

டிப்ஸ்: -8

  • தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு உணவு என்பது மிகவும் முக்கியம். அவர்கள் கவனம் முழுவதும் தேர்வு எழுதுவதில் இருக்கும். அவர்கள் சாப்பிடாமல் தேர்வுக்கு சென்றால் அவர்களால் ஒழுங்காக தேர்வு எழுத முடியாது அதனால் அவர்களுக்கு 2 இட்லி அல்லது ஒரு டம்ளர் பால் குடித்து செல்லலாம். அதும் இல்லை என்றால் பேரிச்சை பழம் சாப்பிட்டுவிட்டு 1 டம்ளர் பால் குடித்து சென்றால் போதும். இதுவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக டிப்ஸ்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement