கல்லூரி முதல்வருக்கு கடிதம்
இன்றைய பதிவில் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதும் முறை எப்படி என்பதை பார்க்க போகிறோம். நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருந்தால், உங்கள் கல்லூரியின் முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டிய பல சூழ்நிலையை நீங்கள் நிச்சயமாக சந்தித்திருப்பீர்கள். இதில் காரணங்கள் வேறுபட்டிருக்கலாம். நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பெறுதல் மற்றும் மறுதேர்வுக்கு அனுமதி கோருதல் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதாகும்.
இதில் முறையான மற்றும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். முறையான கடிதம் என்பது ஒரு கடிதம், நீங்கள் ஒரு கோரிக்கை, பரிந்துரை, விளக்கக்காட்சி, நன்றி, உரிமைகோரல், ராஜினாமா அல்லது குறிப்பிட்ட தகவல்களை வெளியிட விரும்பும் சந்தர்ப்பங்களில் வழக்கமாக இருக்கும். இந்த பதிவில் மறுதேர்வுக்கு அனுமதி கோரி உங்கள் முதல்வருக்கு முறையான கடிதம் எழுதுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க …..
மறுதேர்வு கடிதம்
இந்த கடிதம் பி.காம் படிக்கும் மாணவன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரால் கணித தேர்வில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் இப்போது முழுமையாக குணமடைந்து மறுதேர்விற்கு எழுதுவதற்கு முதல்வருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
கல்லூரி தலைமை ஆசிரியர்
அனுப்புனர் : தேதி :—————
தங்கள் பெயர்
தங்கள் முகவரி
பெறுநர் :
கல்லூரியின் பெயர்
கல்லூரி முகவரி
பொருள் : மறு தேர்வுக்கு அனுமதி கோருதல்
மதிப்பிற்குரிய முதல்வர்,
வணக்கம்…நமது கல்லூரியில் கடந்த வருடம் பி.காம் படித்து வந்துள்ள நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் கணித தேர்வில் பங்கு பெற இயலவில்லை. ஆகையால், மறு தேர்வை நிர்ணயிக்கவும், அவரது வகுப்பு ஆசிரியை திருமதி (XXX) மற்றும் கணித ஆசிரியருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். இந்த விஷயத்தை தொடங்குவதற்கு முன்பு, உங்களிடம் அணுமைதியை பெற விரும்புகிறேன். எங்களது விண்ணப்பத்தை ஏற்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
XXX
மாற்று சான்றிதழ் வழங்க கோரி கடிதம்
கல்லூரி தலைமை ஆசிரியர்
அனுப்புனர் : தேதி :—————
தங்கள் பெயர்
தங்கள் முகவரி
பெறுநர் :
கல்லூரியின் பெயர்
கல்லூரி முகவரி
பொருள் : மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டுதல்
மதிப்பிற்குரிய ஐயா ,
வணக்கம் , நான் நமது கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் படிப்பை 2024 ஆம் ஆண்டு முடித்துள்ளேன்.சில குடும்ப சூழ்நிலை காரணமாக எனது சான்றிதழை பெறவில்லை.இப்போது எனது வேலைவாய்ப்பிற்காக பட்டப்படிப்பு சான்றிதழ் தேவைப்படுகிறது. அதனை வழங்கி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
XXX
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














