வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இதை மட்டும் பண்ணுங்க, எத்தனை வருடமானாலும் படித்தது மறக்காது..!

Updated On: January 9, 2023 1:30 PM
Follow Us:
marakamal padipathu eppadi
---Advertisement---
Advertisement

படித்தது மறக்காமல் இருக்க

பள்ளி குழந்தையாக இருக்கட்டும் அல்லது கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் படித்தால் மட்டுமே தேர்வில் பதில் எழுத முடியும். ஆனால் நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் என்று நினைப்பீர்கள். படிக்க உட்கார்ந்தால் தூக்கம் வரும். சில நபர்கள் விழுந்து விழுந்து படிப்பீர்கள். ஆனால் விரைவாக படித்ததை மறந்து விடுவார்கள். இது படிக்கும் போது அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை தான். எவ்வளவு படித்தாலும் இரண்டு நாட்கள் கழித்து பார்த்தால் ஒன்றும் ஞாபகம் இருக்காது. படித்ததை மறக்காமல் இருப்பதற்காக சில டிப்ஸை இந்த பதிவின் படித்து தெரிந்து கொள்வோம்.

படித்தது மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:

படிப்பது மறக்காமல் இருக்க

Study With Fantasy:

நீங்கள் எதை படித்தாலும் ஞாபகம் இருப்பதற்காக ஈசியாக கதை போல் நினைத்து படியுங்கள்.

எடுத்துக்காட்டிற்கு.., இளங்கோவடிகள் எழுதிய நூல் எது.?

விடை: சிலப்பதிகாரம்

இதனை எப்படி படிக்கலாம் என்றால், இளங்கோவடிகள் என்பதில் கோவை என்பதை மனதில் வைத்து, விடையில் இருக்கும் காரம் என்பதை கற்பனை செய்து சிலப்பதிகாரம் என்று நினைத்து படியுங்கள். இது போல் வேறு உங்களுக்கு மனதில் பதியும் படி ஏதாவது ஒன்றை நினைத்து, நீங்கள் படிக்கும் விஷயங்களை படித்தால் மறக்காமல் இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும்?

Read with Regular Place:

படிப்பது மறக்காமல் இருக்க

நீங்கள் தினமும் படிக்கும் இடம் ஒரே இடமாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் நீங்கள் படிக்க கூடிய இடத்தில் Positive Energy சூழ்ந்திருக்கும். அதனால் நீங்கள் அந்த இடத்திற்கு சென்றதுமே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும். மேலும், கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருக்கும்.

Take a Brain Tablet:

படிப்பது மறக்காமல் இருக்க

நீங்கள் படிக்கும் போது சோர்வான நிலை ஏற்பட்டால் அப்போது படிக்க வேண்டாம். ஏனென்றால், அப்போது படித்தால் மூளையில் எதுவும் ஏறாது. அதனால் கொஞ்சம் நடக்கவும், இல்லையென்றால் பிடித்த பாட்டு கேட்கவும், டீ அல்லது காபி குடிக்கவும். அதன் பிறகு படிக்க வேண்டும். ஒன்றுமில்லை நீங்கள் Energy ஆகிவிட்டு படித்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

தினமும் படிக்க வேண்டும்:

நீங்கள் படிப்பதை தினமும் படிக்க வேண்டும். அதவாது REVISION செய்ய வேண்டும். மேலும் காலையில் எழுந்து படிக்கும் போது படிக்காததை புதிதாக எடுத்து படிக்காதீர்கள். படித்து மனப்பாடம் செய்ததையே மறுபடியும் படித்தால் மறக்காமல் இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ 12th முடித்துவிட்டு இந்த Computer Course படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now