மறக்காமல் படிப்பதற்கு எளிய வழிமுறைகள் | Marakkamal Padippathu Eppadi

Advertisement

மறக்காமல் படிப்பது எப்படி? | How To Study Fast Without Forgetting in Tamil

படிக்கும் போது அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் படித்ததை நினைவில் வைத்து கொள்வது தான். எவ்வளவு நேரம் படித்தாலும் தேர்வு அறைக்குள் நுழையும்போதோ அல்லது வினாத்தாளை பார்த்தவுடன் படித்த விடைகள் அனைத்தும் மறந்துவிடும். அப்படி நாம் படித்ததை எப்படி மறக்காமல் நினைவில் வைத்து கொள்வது என்பதற்கான சில யோசனைகளை நாங்கள் இந்த தொகுப்பில் கொடுத்துள்ளோம். போட்டித்தேர்வு, செமஸ்டர் தேர்வு, பொதுத்தேர்வு போன்ற தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம், வாங்க மறக்காமல் படிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மறக்காமல் படிப்பது எப்படி? – Marakkamal Padippathu Eppadi in Tamil

How To Study Fast Without Forgetting in Tamil

  • மதிப்பெண்களுக்காக படிக்காமல் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை தெரிந்து கொள்ள போகிறோம் என்ற ஆர்வத்துடன் படிக்க ஆரம்பியுங்கள்.
  • நாம் படிக்கின்ற எந்த பாடமாக இருந்தாலும் முதலில் அந்த பாடத்தை புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.

படித்தது மறக்காமல் இருப்பது எப்படி?

படித்தது மறக்காமல் இருப்பது எப்படி

  • பின் நீங்கள் புரிந்து கொண்ட பாடத்தை உங்கள் நண்பருக்கோ அல்லது உங்களுடன் படிப்பவருக்கோ உங்கள் ஆசிரியர் எப்படி சொல்லி கொடுப்பார்களோ அதே போன்று மற்றவருக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.
  • சொல்லி கொடுக்கும்பொழுது எளிமையாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.

மறக்காமல் படிப்பது எப்படி? – Padippathu Eppadi

 Marakkamal Padippathu Eppadi

  • படிக்கும்பொழுது உங்களுக்கு எந்த வார்த்தையாவது புரியவில்லை எனில் அந்த வார்த்தையை ஒன்று அல்லது இரண்டு முறை படித்து அதனை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் அல்லது யார் சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு புரியுமோ அவர்களிடம் கேட்டு படித்து பாருங்கள்.
  • முக்கியமாக Technical வார்த்தைகளை பயன்படுத்தாமல் உங்களுக்கு எந்த மொழியில் படித்தால் புரிந்து கொள்ள முடியுமோ அந்த மொழியில் படியுங்கள். அப்படி படிக்கும் எந்த பாடமும் உங்களுக்கு எத்தனை வருடம் முடிந்தாலும் மறக்கவே மறக்காது.

புரிந்து படிப்பது எப்படி – Eppadi Padippathu:

புரிந்து படிப்பது எப்படி

  • தமிழில் உள்ள செய்யுள் பாடல்களை திரைப்பட பாடல்கள் மெட்டில் பாடி நியாபகம் வைத்து கொள்ளலாம்.
  • அறிவியல் மற்றும் கணித பாடங்களை ஏதேனும் ஒரு பொருளுடன் ஒப்பிட்டு படித்தால் விரைவாக புரிந்துவிடும் எளிதில் மறக்காது.
  • உதாரணமாக வண்ணங்கள், ஓசைகள், எழுத்துக்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு படித்தால் அந்த பொருட்கள் நினைவுக்கு வரும்பொழுது நீங்கள் படித்தவையும் நினைவிற்கு வந்துவிடும்.

படிக்கும் முறை – படிப்பது மறக்காமல் இருப்பது எப்படி?

  • படிக்கும்பொழுது தங்களுக்கு எந்த பாடம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அந்த பாடத்தை முதலில் படிக்க வேண்டும், ஏனெனில் எளிமையான பாடங்களை படிப்பதற்கு குறைந்த நேரமே தேவைப்படும். கடினமான பாடங்களை படிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆதலால் கடினமான பாடங்களை முதலில் படிக்க வேண்டும்.

மறக்காமல் படிப்பது எப்படி

  • ஆசிரியர் பாடம் நடத்தும் போது அல்லது வீட்டில் படிக்கும் போது வரலாற்று சிறப்புமிக்க ஊர்கள், இடங்கள், வருடங்கள் போன்றவற்றை குறிப்பு எடுத்து வைத்து படிப்பது நல்லது.
  • படிக்கும் போது மனதை ஒருநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

Marakkamal Padippathu Eppadi:

படிக்கும் முறை

  • படிப்பு முக்கியம் என்றாலும் படித்துக்கொண்டே இருக்காமல் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் நிம்மதியான உறக்கம் வேண்டும். மூளை மற்றும் உடல் புத்துணர்ச்சி அடைவதற்கு சில நிமிடங்கள் உடற் பயிற்சி செய்யுங்கள்.
  • அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்கள், ஜூஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • மேற் கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினாலே நாம் படித்ததை மறக்காமல் நினைவில் வைத்து கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும்?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement