வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மதிப்பு கல்வி என்றால் என்ன தெரியுமா? | Mathuppu Kalvi In Tamil

Updated On: November 24, 2025 12:51 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mathuppu Kalvi In Tamil 

 

இன்றைய பதிவில் மதிப்பு கல்வி என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம்.மதிப்பு கல்வி என்பது தார்மீக மற்றும் நெறிமுறை வளர்ச்சியை நோக்கமாக கொண்ட ஒரு கல்வியாகும். இதில் எது சரி எது தவறு என்பதை புரிந்துகொள்வதற்கும், நேர்மையான மற்றும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் உதவுகிறது. இது வெறும் கல்வி மட்டுமல்ல பச்சாத்தாபம், நேர்மை, இரக்கம், மரியாதை போன்ற மதிப்புகளை மாணவர்களிடம் விதைத்துஅவர்களை தனிமனித ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேம்படுத்துகிறது. ஒரு முன்மாதிரியான குடிமகன் பிறப்பதில்லை உருவாக்கபடுகிறான்.

நாம் கணிதத்தையும் மொழியையும், கற்றுக்கொள்வது மற்றும் விமர்சன சிந்தனை போன்ற நல்லிணக்கத்திலும், சமூக முன்னேற்றத்திலும் வளர்ப்பதற்கும் அடிப்படையான பாடங்களில் நாம் நிபுணர்களாக மாற வேண்டும். மேலும், பொது அறிவு சம்மந்தமான கேள்விகளை மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வு வந்தால் மட்டும் தான் படிக்க ஆரம்பிக்கிறார்கள். பரீட்சையின் போது மட்டும் படித்தால் தேர்வின் போது மட்டுமே உங்களுக்கு விடைகள் நியாபகம் இருக்கும், அதற்கு பின் நினைவில் இருக்காது. எப்போதுமே பொது அறிவு சார்ந்த கேள்விகளை அவசரமான சூழ்நிலையில் படிக்காமல் நிதானமாக படித்தால், நீங்கள் எந்த தேர்விற்க்கும் பயமில்லாமல் செல்லலாம். அந்த வகையில்  இன்றைய பதிவில் வாழ்விக்கும் மதிப்பு கல்வி பற்றி பார்க்கலாம் வாங்க…. 

மதிப்பு கல்வி நோக்கம்:

மதிப்பு கல்வி முக்கிய நோக்கம் அதிக  சிவில் மற்றும் ஜனநாயக சமூகங்களை உருவாக்குவதற்கு தார்மீக தரங்களை ஊக்குவிக்கும் கல்வி செயல்முறையை பற்றியது. எனவே மதிப்புக்கல்வி , அரசியல், கலாச்சார மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் சகிப்புத்தன்மை மற்றும் புரிதலை ஊக்குவிக்கிறது. மனித உரிமைகளை பாதுகாத்தல், இன சிறுபான்மையினர் மற்றும் மிகவும் பாதிக்கப்பட கூடிய குழுக்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிக கவனம் செலுத்துகிறது.பாகுப்பாட்டை நிராகரித்தல்,தார்மீக விஷயங்களில் விவாதத்தை உயிர்பித்தல் மற்றும் கூட்டுத் தலைமையை ஊக்குவித்தல் . தனிநபர்களை இழிவுபடுத்தாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் அணுகுமுறையை கண்டித்தல் மதிப்புக்கல்வி குடியுரிமை மற்றும் நெறிமுறைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. அவை,

  • பச்சாத்தாபம் 
  • சம வாய்ப்புகள் 
  • சுற்றுச் சூழலுக்கான மரியாதை
  • ஆரோக்கியத்தை பேணுதல்
  • விமர்ச்சன சிந்தனை 

வாழ்விக்கும் கல்வி வினா விடை | Vaalviyal Kalvi Gk Question Answer In Tamil

மதிப்பு கல்வியின் முக்கியத்துவம்:

  1.  குழந்தைகளுக்கு மரியாதை பற்றி கற்பித்தல்
  2. நேர்மையை வளர்ப்பது
  3. இரக்கத்தை வளர்ப்பது
  4. கடின உழைப்பை தழுவுதல்
  5. கருணையை பரப்புதல்
  6. நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ளுதல்
  7. பகிர்ந்துகொள்ள கற்றுக்கொள்வது.
  8. ஒன்றாக வேலை செய்தல்
  9. பொறுப்பை ஏற்றுக்கொள்வது.
  10. தாராள மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now