தமிழ்நாட்டில் MBBS படிக்க எவ்வளவு செலவு ஆகும் ?

MBBS Fees in Tamilnadu Govt Colleges

டாக்டர் படிக்க எவ்வளவு செலவு ஆகும்? – MBBS Fees in Tamilnadu Govt Colleges

நண்பர்களுக்கு வணக்கம்.. டாக்டர் ஆக வேண்டும் என்கின்ற மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது நீட் தேர்வு தான். இந்த நீட் தேர்வில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண்கள் எடுத்துவிட்டால் பிறகு அதிக செலவு செய்து தான் மருத்துவ படிப்பை படிக்க முடியும். இதன் காரணமாக தான் மாணவர்கள் நீட் தேர்வுக்கு அதிக கவனம் செலுத்தி படிகின்றன. சரி இந்த பதிவில் நாம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிக்க எவ்வளவு செல்வாக்கும் என்பது குறித்து படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

தனியார் மருத்துவ கல்லூரி – MBBS Fees in Tamilnadu Private Medical Colleges:

இந்த தனியா மருத்துவ கல்லூரி பொறுத்தவரை MBBS படிக்க எவ்வளவு கட்டணம் வாங்கவேண்டும் என்று நமது தமிழக அரசால் நிர்ணகிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்றால் 3.58 லட்சம் முதல் 4 லட்சம் ஆகும்.

இது தவிர நீங்கள் அந்த கல்லூரியில் இருக்கும் ஹாஸ்டலில் சேர்ந்து படித்தால் ஹாஸ்டல் கட்டணம் இருக்கும், தேர்வு கட்டணம் இருக்கும் இது தவிர மற்ற கட்டணங்களையெல்லாம் சேர்த்து ஒரு வருடத்திற்கு 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கட்டணம் வசூலிக்கின்றன. இதனை நீங்கள் வருடத்திற்கு என்று பார்க்கும் போது அது பல லட்சங்களை தாண்டி போகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Exam எழுதும் போது இந்த 5 தவறை செய்து விட்டீர்கள் என்றால் மார்க் அவ்ளோ தான்..

அரசு மருத்துவ கல்லூரி – MBBS Fees in Tamilnadu Govt Colleges:

அதுவே நீங்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது இதற்கு அரசாங்கம் ஒருவருடத்திற்கு நிர்ணகித்துள்ள கட்டணம் என்று பார்க்கும்போது 13,610 ரூபாய் மட்டும் தான் இது Tuition Fees ஆகும். Tuition Fees-ம் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டுகளில் படி படியாக குறைந்துகொண்டே வரும்.

இது போக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் இந்த தேர்வு கட்டணம் என்பது வருடத்திற்கு வருடம் மாறுபடும். ஆக அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வருட Tuition Fees என்று பார்க்கும் போது 26000 ரூபாய் மட்டும் தான் வரும்.

மற்றபடி ஹாஸ்டல் கட்டணம் 40,000/- முதல் 50,000/- ரூபாய் வரை அந்ததந்த கல்லூரிகளை பொறுத்து வேறுபாடும். மேலும் புத்தகங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கும் அதற்கு 6000 ரூபாய் வருடத்திற்கு செலவாகும்.

ஒரு வருடத்திற்கு 30000 என்றால் நான்கு வருடத்திற்கு 1,20,000/- ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். MBBS-யில் 5வது வருடம் என்பது Internship ஆகும். ஆக மாணவர்கள் இந்த Internship-ஐ அட்டன் செய்வார்கள். இதற்கு மாதம் மாதம் ஊதியம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அந்த ஒரு வருடம் அரசாங்கம் உங்களை நிர்ணமிக்கும் பகுதியில் நீங்கள் பயிற்சிபுரிவீர்கள் இதற்கு உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 21,000/- ஊதியம் வழங்கப்படும்.

ஆக நீங்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்து நான்கு வருடம் செலவு செய்தால், 5-வது வருடத்திலேயே நீங்கள் செலவு செய்த பணத்தை மீண்டும் திரும்ப பெற்றுவிடுவீர்கள். ஆனால் இது தனியார் மருத்துவ கல்லூரியில் வழங்கப்படுவதில்லை.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
B.Sc Nursing பட்டப்படிப்பு பற்றிய தகவல்..!

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி