மருத்துவ துறையில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா.! அப்போ என்னென்ன படிப்புகள் இருக்கிறது என்று தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

மருத்துவ படிப்பு வகைகள்

இந்த ஆண்டு தான் 12th முடித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருப்பவர்களா நீங்கள்.! அப்போ சரியான பதிவை தான் படிக்கிறீர்கள். ஏனென்றால் இந்த பதிவில் 12th படித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்காக அருமையான யோசனையை பதிவிட்டுள்ளோம். அதிலும் நீங்கள் மருத்துவ துறையில் உள்ள படிப்பை ஏதவாது படித்திட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்கு மருத்துவ துறையில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றது என்று அறிந்திருக்க வேண்டும். அதனால் இந்த பதிவில் மருத்துவ துறையில் உள்ள படிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

மருத்துவ துறையில் உள்ள படிப்புகள்:

முதலில் மருத்துவ துறையில் சார்ந்த படிப்புகள் படிக்க வேண்டுமென்றால் 12ஆம் வகுப்பில் வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சில மருத்துவ படிப்பிற்கு வேதியியல், இயற்பியல், கணிதம் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. பொது மருத்துவம் (MBBS/BDS)
  2.  துணை மருத்துவ படிப்புகள்
  3.  மருத்துவ டிப்ளோமா/சான்றிதழ் படிப்புகள்
  4.  இந்திய மருத்துவ படிப்புகள்

பொது மருத்துவம் :

medical courses list after 12th in tamil

NEET தேர்வின் மூலம் தான் MBBS/BDS படிப்பிற்க்கான சேர்க்கை  நடைபெறுகின்றது. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 85 % இடங்கள் தமிழக அரசின் இந்த கவுன்சிலிங் மூலம் நிரப்பபடுகின்றது. மீதம் உள்ள 15 % இடங்கள் மத்திய அரசின் மருத்துவ கவுன்சிலிங் மூலம் நிரப்ப படுகின்றது. NEET தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் மட்டுமே MBBS/BDS படிப்பில் சேரலாம்.

துணை மருத்துவ படிப்புகள்:

medical courses list after 12th in tamil

துணை மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு தமிழக அரசு தனியாக கவுன்சிலிங் நடத்துகின்றது.  +2-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) பாடத்தில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மேற்சொன்ன பாடங்களில் சராசரியாக 180 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள் இதற்கு முயற்சி செய்யலாம்.

  1. B.Pharm.
  2. B.Sc.(Nursing)
  3.  B.P.T.
  4.  B.ASLP.
  5.  B.Sc. Radiology and Imaging Technology
  6.  B.Sc. Radio Therapy Technology
  7. B.Sc. Cardio-Pulmonary Perfusion Technology
  8. B.O.T• B. Optom.
12-வகுப்பு முடித்துவிட்டு B.sc Forestry பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

மருத்துவ டிப்ளோமா/சான்றிதழ் படிப்புகள் :

மருத்துவ கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டு மருத்துவ டிப்ளோமா படிப்புகள் மற்றும் ஓர் ஆண்டு மருத்துவ சான்றிதழ் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதில் சேர்வதற்க்காக தமிழக அரசு தனி கவுன்சிலிங் நடத்துகின்றது. +2-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) பாடத்தில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

இரண்டு ஆண்டு மருத்துவ டிப்ளோமா படிப்புகள்:

Accident & Emergency Care Technology

Critical Care Technology

Operation Theatre & Anesthesia Technology

Medical Record Science• Optometry Technology

Radiology & Imaging Technology

Medical Lab Technology

Dialysis Technology

ஒரு மருத்துவ சான்றிதழ் படிப்புகள்:

ECG/Treadmill Technician

Pump Technician

Cardiac Catherization Lab Technician

Emergency Care Technician

Respiratory Technician

Dialysis Technician

Anaesthecia Technician

Theatre Technician

Orthopaedic Technician

இந்திய மருத்துவ படிப்புகள்:

medical courses list after 12th in tamil

B.S.M.S-Bachelor of Siddha Medicine and Surgery (சித்தா)

B.U.M.S-Bachelor of Unani Medicine and Surgery (யுனானி)

B.A.M.S-Bachelor of Ayurveda Medicine and Surgery (ஆயுர்வேதா)

B.H.M.S-Bachelor of Homeopathy Medicine and Surgery (ஹோமியோபதி)

B.N.Y.S-Bachelor of Naturopathy and Yogic Science (நேச்சுரோபதி)

12-வகுப்பு முடித்து விட்டு B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

 

Advertisement