முகநக நட்பது நட்பன்று திருக்குறள் பொருள் | Muganaga Natpadhu Thirukkural Meaning
தமிழில் உள்ள நூல்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை தான். அதிலும் திருக்குறள் உலக அளவில் புகழ் பெற்ற நூல். இது ஒரு வாழ்வியல் நூல், மக்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்ல கூடிய நான்கு பொருட்களையும் பின்பற்றி வாழவேண்டும் என்று பல விதமான கருத்துக்களை இந்த நூலில் எடுத்துரைத்துள்ளார். இந்த நூலால் தமிழுக்கு மற்றும் திருவள்ளுவருக்கு புகழ் கிடைத்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நூலில் இருக்கும் நட்பு அதிகாரத்தில் உள்ள முகநக நட்பது நட்பன்று என்ற குறளில் உள்ள பொருளை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Thirukkural Muganaga Natpadhu Natpandru:
| குறள் எண் | 786 |
| குறளின் பால் | பொருட்பால் |
| அதிகாரம் | நட்பு |
| இயல் | நட்பியல் |
குறள்: 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
முகநக நட்பது நட்பன்று திருக்குறள் விளக்கம்:
- நேரில் பார்க்கும் போது மட்டும் ஒருவரை பார்த்து புன்னகை கொள்வது நட்பு கிடையாது. ஒருவரை பார்த்தவுடன் முகத்திலும், அகத்திலும் உளமார நேசிப்பதே நட்பாகும்.
- ஒரு சிலர் பழக்கத்திற்காக ஒருவரை பார்த்து இனிமையாக பேசுவார்கள், ஆனால் மனதில் அவர்களை ஏசுவார்கள் அது நட்பு கிடையாது. நண்பனை பார்த்தவுடன் உள்ளத்திலும் மகிழ்ச்சி எழ வேண்டும், அவர்களை எப்போது பார்ப்போம் என மனது ஏங்க வேண்டும், அப்படி இருக்கும் நட்பே உண்மையான நட்பாகும்.
| நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள் |
கலைஞர்களின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
முகத்தில் மட்டும் சிரிப்பை வைத்து கொண்டு பழகுவது நட்பு அல்ல, உள்ளமும் மகிழும் படி நட்பு பாராட்டுவதே நட்பு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவரை பார்க்கும் போது மட்டும் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு பழகுவது நட்பு அன்று, தங்களின் அன்பால் மனமும் மலருவதே நட்பு ஆகும்.
கலைஞர் உரை:
இன்முகம் காட்டி பழகுவது மட்டும் நட்புக்கு சிறந்ததல்ல, மனதார நேசிப்பதே உண்மையான நட்புக்கு சிறந்தது ஆகும்.
ஞா.தேவநேயப்பாவாணர்:
கண்டவுடன் முகம் மட்டும் மலர்ந்து, அகம் மலராமல் இருப்பது நட்பன்று, அன்பால் உள்ளமும் மலருமாறு பழகுவதே நட்பாகும்.
புலியூர் கேசியின்:
உள்ளம் கலக்காமல் முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்பு செய்வது நல்ல நட்பு ஆகாது. நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு ஆகும்.
| தொடர்புடைய பதிவு: |
| திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை |
| திருக்குறள் சிறப்புகள் |
| 10 எளிமையான திருக்குறள் |
| 20 எளிமையான திருக்குறள் |
| 50 easy thirukkural in tamil |
| கல்வி திருக்குறள் |
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |














