வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நான்மணிக்கடிகை நூல் குறிப்பு | Naanmanikadikai Nool Kurippu In Tamil 

Updated On: December 11, 2025 12:32 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Naanmanikadikai Nool Kurippu In Tamil 

இன்றைய பதிவில் நான்மணிக்கடிகை நூல் குறிப்பு பற்றி பார்க்க போகிறோம். நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது ஒரு நீதி நூல் விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளை கொண்டுள்ளது. இந்நூற்பா  ஒவ்வொன்றிலும் நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதுனாலையே இது நான்கு வகை மணிகளால் ஆனஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன. இவற்றில் இரண்டு பாடல்கள் ஜி யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும். பொது தேர்வு மற்றும் அரசு தேர்வுக்கு படித்துக்கொண்டிருபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த பதிவில்   நான்மணிக்கடிகை நூல் குறிப்பு  பற்றி பார்க்கலாம்.

நான்மணிக்கடிகை என்றால் என்ன?

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு ஒன்று நான்மணிக்கடிகை ஆகும். நீதி நூலான இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். இந்நூலில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றியிரண்டு  பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்தில் திருமாலின் பெருமை கூறப்பட்டுள்ளதால் இது வைணவம் சார்ந்த புலவர்களால் இயற்றப்பட்ட நூலக கருதப்படுகிறது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளை கொண்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நூறு பாடல்களை கொண்ட நூல்கள் நான்கு மட்டுமே அவை நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை, திரிகடுகம்,சிறுபஞ்சமூலம் ஆகியவையாகும். இவற்றில் தலைசிறந்த  நீதிகளை கூறும். முதன்மை நூலக நான்மணிக்கடிகை திகழ்கிறது.

நான்மணிக்கடிகை சிறப்பு:

மனித வாழ்விற்கு தேவையான அறநெறிகள்  பலவற்றை கொண்ட நூல் இது. ஒவ்வொரு பாடலிலும் மணியான நான்கு கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதால் இந்நூல் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. கடிகை என்பதற்கு துண்டம் என்று பொருள் உண்டு. அந்தவகையில் நான்குவகை ரத்தின துண்டுடங்கள் என்ற பொருளில் நான்மணிக்கடிகை வந்ததாக ஆய்வாளர், பேராசிரியர் வே. இரா.மாதவன் குறித்துள்ளார். 

நேரிசை, இன்னிசை,அளவியல் வெண்பாக்களால் ஆன இந்நூலில் மூன்று பஃறொடை  வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன. மதி என்னும் மாயவன் என்ற கடவுள் வாழ்த்தும், கற்ப கழிமடம் அஃகும். இனிது உண்பான் என்பான் என்ற செய்யுள்களும் பஃறொடை வெண்பாவால் ஆனவை. தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது இந்நூல். 

நான்மணிக்கடிகை

ஒவ்வொரு பாடலிலும் மணி போன்ற நான்கு கருத்துகள் உள்ளன.

ஆசிரியர் – விளம்பிநாகனார்

காலம் – பொ.ஆ. பி.2ஆம் நூற்றாண்டு

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 104+2 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.

அறநூல்கள் யாவை? – Ara Noolgal

 

கடவுள் வாழ்த்து:

மதிமன்னும் மாயவன் வாள்முகம் ஒக்கும் 

கதிர்சேர்ந்த ஞாயிறு கதிரவன் ஒக்கும் 

முதுநீர்ப்  பழனத்துத்  தாமரை தாளின் 

எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும்  பூவை 

புதுமலர் ஒக்கும் நிறம்

பொருள்: 

நிலவானது நிலைத்த பேறுடைய திருமாலின் முகத்தை ஒத்திருக்கும். ஒளிரும் ஞாயிறு அவனது சக்கரத்தை ஒத்திருக்கும். வயலில் காணப்படும் தாமரை அவனது கண்களை ஒத்திருக்கும். காயாம்பூவானது அவனது திருமேனி நிறத்தை ஒத்திருக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now