நீரின்றி அமையாது உலகு திருக்குறள் விளக்கம் | Neerindri Amayathu Ulagu Thirukural Meaning in Tamil
நீரின்றி அமையாது உலகு குறள் விளக்கம்: நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த பதிவில் உலகத்திலே மிகவும் புகழ்பெற்ற நூலாக விளங்குவது திருக்குறள். திருவள்ளுவர் ஒவ்வொரு குறளிலும் வாழ்க்கைக்கு தேவையான அற்புதமான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். திருவள்ளுவரை நாயனார், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் என்று பல சிறப்பு பெயரால் அழைத்து வருகிறார்கள். திருவள்ளுவர் மொத்தமாக 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய அனைத்து குறளிற்கும் நாம் கட்டாயமாக விளக்கத்தினை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாங்க இந்த பதிவில் நீரின்றி அமையாது உலகு திருக்குறளுக்கான விளக்கத்தினை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..
அன்பும் அறனும் திருக்குறள் பொருள் |
நீரின்றி அமையாது உலகு எழுதியவர்:
நீரின்றி அமையாது உலகு எழுதியவர் திருவள்ளுவர்.
நீரின்றி அமையாது உலகு திருக்குறள்:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்
இன்று அமையாது ஒழுக்கு
மு.வ விளக்க உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழ முடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
கலைஞர் விளக்க உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு. வரதராசன் உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
புலியூர்க் கேசிகன்:
நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது
தேவநேயப் பாவாணர் உரை:
யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் – எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று உலக வாழ்வு நடவாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது – அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் மழையின்றி நிகழாது. உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளும் ஒப்புயர்வற்ற வேந்தனாயினும், மழையின்றி வாழும் வழியில்லை யென்பதாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நீரில்லாமல் உலகத்தில் ஒரு காரியமும் நடக்காது; நீங்கள் எதை வெட்டி நீரை எடுக்க முயன்றாலும் அது நடக்காது. யார் யார் எப்படி எப்படி முயன்றாலும், மன மழையில்லாவிட்டால் கிடைக்காது.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருள் |
நீரின்றி அமையாது உலகு குறள் விளக்கம்:
இறைவனுடைய கருணை வடிவுதான் மழை. இதற்காகவே திருவள்ளுவர் கடவுள் வாழ்த்திற்கு அடுத்து வான்சிறப்பு அதிகாரத்தை இயற்றியுள்ளார். உலகில் தங்கம், வெள்ளி, எரிவாயு எண்ணெய், கலை இலக்கியம் இல்லாமல் போனால் எப்படியாவது உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால் நீர் மட்டும் இல்லையென்றால் உலகத்தில் மனிதன் உட்பட எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழ முடியாது. அத்தகைய நீரை உலகத்திற்கு மழையாக கொடுப்பது வானத்தில் உள்ள மேகங்கள் தான்.
இந்த மழை பொய்த்து போனால் உலகத்தில் வறுமை நிலை உண்டாகும். வறுமை ஏற்பட்டால் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றங்கள் பெருகினால் அறம் குறையும் ஒழுக்கம் கெடும். ஆதலால் மழை பொய்த்தால் உயிர்கள் வாழ்வது மட்டும் இல்லாமலாகிவிடாது அறமும் ஒழுக்கமும் கெட்டுப்போகும். அறமும் ஒழுக்கமும் கேட்டால் கேடு விளையும் உலகம் அழியும்.
அதனால் மழை பொழிவதற்கு தேவையான மரங்கள், காடுகள், கடல், ஆறு, குளம், ஏரி போன்றவற்றை நாம் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
தொடர்புடைய பதிவு: |
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |