நியூட்டனின் விதிகள் | Newton’s Law in Tamil

Advertisement

நியூட்டனின் 3 விதிகள் | Newton’s Law in Tamil Examples

நியூட்டன் விதிகள்: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நியூட்டனின் விதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரியில் அறிவியல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் உதவுவது நியூட்டனின் விதிகள் தான். தேர்வில் ஃபார்முலாவிற்கென்றே ஒரு தனி மதிப்பெண் வழங்கப்படுகிறது. தேர்வறையில் விதிகளை மறக்காமல் இருக்க எளிமையான முறையில் நினைவு வைத்துக்கொள்ள எங்கள் பொதுநலம் பதிவில் நியூட்டனின் விதிகளை படித்தறியலாம் வாங்க.

நியூட்டனின் இயக்க விதிகள் – Newton’s Law in Tamil:

ஓய்வில் உள்ள பொருளை இயக்குவதற்கு அல்லது இயக்க முயற்சிப்பதற்கான செயல் விசை எனப்படும். இந்த நிலையை விளக்குவது நியூட்டனின் இயக்க விதிகள் ஆகும். விசையானது என் மதிப்பும் திசையும் கொண்ட வெக்டர் அளவு.

இதன் SI அலகு நியூட்டன் (N) ஆகும்.

நியூட்டனின் முதல் விதி – Newton’s First Law in Tamil:

newton's first law in tamil

நியூட்டன் விதிகள்: எந்த ஒரு பொருளும், அதன் மீது புறவிசை செயல்படாதவரை தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றி கொள்ளாமல் தனது தொடக்க நிலையிலேயே இருக்கும். இந்த விதி நிலைமம் எனப்படும்.

(எ.கா) மேசையின் மீது புறவிசை செயல்படாதவரை தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றி கொள்வதில்லை.

நியூட்டனின் இரண்டாம் விதி – Newton’s Second Law in Tamil:

newton's second law in tamil

Newton Law Tamil: பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்தமாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசைக்கு ஒத்ததாக அமையும்.

F=ma 

  • F = விசை
  • m = நிறை
  • a = முடுக்கம்

நியூட்டனின் மூன்றாம் விதி – Newton’s Third Law in Tamil:

newton's third law in tamil

ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் ஒரே பொருள்கள் மீது செயல்படுவதில்லை. அதாவது ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.

அறிவியல் விஞ்ஞானிகள் வரலாறு

நியூட்டனின் மூன்றாம் விதி எடுத்துக்காட்டு:

நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement