இயற்கை வேளாண்மை தமிழ் பேச்சு | Iyarkai Velanmai Speech in Tamil
இன்றைய பதிவில் இயற்கை வேளாண்மை பேச்சு போட்டி தொகுப்பு பற்றி பார்க்க போகிறோம்.ஒவ்வொரு நாட்டினுடைய முதுகெலும்பும் விவசாயம் ஆகும். விவசாயம் உணவுக்கு மட்டும் இல்லாமல் அதைச் சார்ந்த தொழிலுக்கும் பயன்பட்டு வருகிறது. வேளாண்மையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது என்றே சொல்லலாம்.இயற்கை விவசாயம் என்பது ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து மண்ணின் தரத்தை உயர்த்தி சுற்று சூழலை தூய்மையாக வைத்திருக்கும் விவசாய முறையாகும்.
மேலும், இதில் இயற்கை உரங்கள் பயிர் சுழட்சி பசுந்தாள் உரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கையாக ஊட்டச்சத்து நிறைந்த உரங்களை உற்பத்தி செய்கிறது. இது வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு போன்றவற்றை அதிகரிப்பதற்கான குறைந்த செலவை கொண்ட விவசாயமுறையாகும். இந்த பதிவில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.
முன்னுரை :
ஒரு காலத்தில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடக இருந்து வந்தது. இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருந்தது. விவசாயத்தை மனிதனுக்கு தேவையான உணவு பொருள் மற்றும் பண பயிர்களை வளர்க்கும் கலை என்று கூறியுள்ளனர். விவசாய நடைமுறையில் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்துவிட்டன. விவசாய முறையானது இயற்கை விவசாயம் மற்றும் தொழில்துறை விவசாயம் என இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் நாம் இயற்கை விவசாயத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.
இயற்கை விவசாயம்:
இயற்கை விவசாயத்தில் எந்த ஒரு கனிம ரசாயனகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உரங்களை பயன்படுத்தாமல் பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்ப்பது ஆகும். இயற்கை விவசாய முறையில் நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. இயற்கை விவசாய முறையில் மற்ற விவசாய முறைகளை விட அதிக நன்மைகளை தருகின்றனர். இயற்கை விவசாய முறையில் மண்மலட்டுத்தன்மை மற்றும் மண் அரிப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்க செய்கிறது. இந்த முறையானது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.
நோய் மேலாண்மை :
இயற்கை வேளாண்மையில் நோய்கள் என்பது விவசாயிகளுக்கு மிக பெரிய கவலையாக இருக்கிறது. ஏனெனில் இவை பயிர்களின் விளைச்சலை குறைக்க கூடும். தாவர நோய்களை தடுக்க முக்கியமாக மேக்ரோ மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை பயிர் சுழட்சியை மேற்கொள்வதும் மிக முக்கியமாக கருதப்படுகிறது. மண்ணில் பயனுள்ள நுண்ணுயிரிகள் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா வளப்படுத்தப்பட்டு. தீங்கு விளைவிக்கும் உயிரனங்கள் வராமல் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
இயற்கை வேளாண்மையின் நன்மைகள்:
இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் வழக்கமான விவசாயத்தை பின்பற்றுவதுபோலவே மகசூலை தருகிறது. சில சமையங்களில் இயற்கை விவசாயம் அதிக மகசூலை தருவதாக கூறப்படுகிறது. இயற்கை முறை விவசாயம் பயன்படுத்துவதன் மூலம் உடல்நல பிரச்சனை வராமல் தடுத்து ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது. இயற்கை வேளாண்மையில் மண் வளம் மற்றும் மிக குறைந்த தண்ணீர் வசதி கார்பன் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றை சிக்கனமாக வைத்திருக்க உதவுகிறது. இதில், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு, வேலைவாய்ப்பு அதிகரித்தல், குறைந்த உற்பத்தி செலவு , மண்ணின் ஆரோக்கியத் தன்மை மற்றும் கால் நடை நிலைத்தன்மை போன்ற நன்மைகளை அளிக்கிறது.
இயற்கை வேளாண்மையின் முக்கிய நோக்கம்:
- இயற்கை தாவரம் மற்றும் உயிரினங்களை பாதுகாத்தல்
- மண் ஆரோக்கியம் மற்றும் மண் உயிரியல் வாழ்க்கையை மீட்டெடுத்தல்
- பயிர் உற்பத்தியில் பன்முக தன்மையை பாதுகாத்தல்
- நிலம் மற்றும் நீர் வளங்களை திறம்பட மேம்படுத்துதல்
- கால் நடை ஒருங்கிணைப்பிற்கான உள்ளூர் இனங்களை ஊக்குவித்தல்
- விவசாயின் பொருளாதார தரத்தை மேம்படுத்துதல்.
முடிவுரை:
இயற்கை வேளாண்மையில் மண்ணில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆரோக்கியமான வேளாண்மை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் சுற்று சூழல் சமநிலையை பராமரிக்க முடியும்.
| இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tamil Katturai |














